Header Ads



ஜனாதிபதியும், பிரதமரும் முஸ்லிம்களை சந்திக்க மறுப்பது ஏன்..??

16 ம் திகதி முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வியாபாரஸ்த்தலங்கள் மீது தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டன. 18 ம் திகதி எமது அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேசி ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்திக்க முடிவு செய்திருந்தார்கள். 23 ம் திகதி ஜனாதிபதியும் பிரதமரும் இவர்களை சந்திக்காது, அதுவரைக்கும் தாக்குதல்கள் நிறுத்தப்படுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்காமல் பாதுகாப்பு அமைச்சர் சாகல ரத்னாயகாவை சந்திக்க சொல்லி விட்டு வெளிநாடு சென்று விட்டனர். நேற்றும் (24.05.2017)மகரகமை நாவின்ன பிரதேசத்தில் ஹாகோட்ஸ் பாமசிக்கு பெற்றோல் குன்று வீசப்பட்டதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.   

நண்பர்களே 5 நாட்கள் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்பட்ட போதிலும், ஜனாதிபதியோ பிரதமரோ மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் பிரதிநிதிகளை சந்திக்க விரும்பாது  வெளிநாடு சென்றுள்ளனர். அந்தளவுக்கு எமது பிரதிநிதிகள் செல்லாக்காசாக மாறிவிட்டனர். அதுவும் எமது பிரதிநிதிகளின் கூட்டம் நிறைவடைந்த நிலையில் " தீர்க்கமான முடிவை அரசு எடுக்கத்தவறினால் தனித்துவமாக இயங்குவோம்" என அச்சுறுத்தியும் இருந்தனர். இந்த ஆதங்கத்தை கூட அரசு கண்டுகொள்ளவில்லை.

இதே நிலை தமிழ் சமூகத்திற்கு நடந்திருந்தால் அரசு இவ்வாறு பொடுபோக்காக நடந்திருக்குமா? அவ்வாறு மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை இவ்விரு தலைவர்களும் உதாசீனம் செய்திருப்பார்களா? சற்று சிந்தியுங்கள். இந்த செல்லாக்காசு நிலைக்கு என்னதான் காரணம். சொகுசுக்கும், பதவிக்கும், ஊழல் வழியில் சம்பாதிக்கும் பணத்துக்கும் அடிமைப்பட்ட எமது பிரதிநிதிகளின் ஈன நிலையைத் தவிர வேறு என்ன காரணம்தான் இருக்க முடியும்? 

இத்துப்போன தும்புகட்டால்(Broom) எமது அழுக்குகளை துடைக்க முடியுமென நம்பும் சமூகமாக நாம் வாழும் வரை அழிவுகளும் இன்னல்களும் எம்மைத் துரத்திக் கொண்டே இருக்கும்.

-YOOSUF-

2 comments:

  1. முஸ்லீம் அமைச்சர்களே! பாராளுமன்ற உறுப்பினர்களே! மற்றும் மாகாணசபை மாந்திமார்களே!
    இதை கொஞ்சம் சிந்திப்பீர்களா? இவற்றுக்கு யாரால் பதில் சொல்லமுடியும்? அப்படியென்றால் அந்த அரசியல்வாதிதான் சாணக்கியன்,அவன்தான் எங்களது தலைவன்,அவன்தான் ஒரு உண்மையான முன்மாதிரி முஸ்லிம் அரசியல்வாதி. ஏன் உங்களுக்கு எங்களது முஸ்லிம் முன்மாதிரி எப்படியென்பதை ஏனயசமூகத்திக்கு எடுத்துக்காட்ட உங்களில் யாருக்கும் விருப்பமில்லையா? ஹஸரத் அபூபக்கர், ஹஸரத் உமறவர்களின் வாழ்க்கை வரலாறுகளை கொஞ்சம் படியுங்கள், அதன்பிறகு அவர்ளின் வாழ்க்கைமுறையை ஒரு அணுவளவேனும் பின்பற்றி நடங்கள்.

    ஏன் சகோதர்களே இன்றைக்கு மூத்த அரசியல்வாதிகளைவிட இளம்/புதிய அரசியல்வாதிகளிடம் நல்லபண்புகள் இருக்கின்றது. அதை அவர்களுக்கு செய்வதுக்கு /நடைமுறைப்படுத்துவத்துக்கு உதவியாக இருப்பதைவிட்டு 20/30 வருடமாக அரசியலில் இருந்ததுபோதுமன்று விலகுங்கள், நேர்மையான அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பை கொடுங்கள்.சம்பாதித்தது போதும், நாட்டுக்கும் மக்களுக்கும் செய்த உதவிகளுக்கு அல்லாஹ்விடம் உங்களுக்கு நட்பாக்கியம் இருக்கிறது. அல்லாஹுக்கா நீங்கள் இந்த நாட்டுமக்களுக்கு செய்யும் உதவி எதிர்வரும் தேர்தல்களில் இளையவர்களுக்கு வாய்ப்பை கொடுத்து அவர்களுக்கு வழிகாட்டிகளாக இருங்கள்.ஜம்மியத்துல் உலமாவின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்கயும் பெற்று எங்களது சமூகத்தை பாதுகாப்பதுடன் எங்களது நாட்டையும் செழிப்புடன் வளர உதவியாக இருங்கள்

    ReplyDelete

Powered by Blogger.