ஆட்சியைப் பிடிக்க முடியாத, அரசியல்வாதிகளே இனமுறுகலைத் தூண்டுகின்றனர்
நேர்மையான தேர்தலொன்றின் மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலையிலுள்ள ஒருசில அரசியல்வாதிகளே இனமுறுகலைத் தூண்டிவிடுகின்றனர் எனவும், அவர்களின் செயற்பாடுகளில் மக்கள் பலியாகிவிடக்கூடாது எனவும் பிரதியமைச்சர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்.
இனக்கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் நாட்டில் அமைதியின்மையைத் தோற்றுவிக்க முயலும் இவர்கள் அதன்மூலம வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்கு வருவதைத் தடுப்பதற்காக செயற்பட்டு வருகின்றனர்.
நாடு துரிதமாக அபிவிருத்தி அடைந்துவருவதால் இத்தகைய விஷமிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. மக்களின் செல்வாக்கை முற்றாக இழந்திருக்கும் இந்த இவர்கள் இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தி நாட்டின் அமைதியைக் குலைக்க முயல்கிறார்கள்.
அவர்களின் இந்த சதித்திட்டத்தை மக்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்; ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது; ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்.
ReplyDelete(அல்குர்ஆன் : 4:108)
www.tamililquran.com
Makkal unerndu kolvadu alla arasangam udanadiyaha uriyawarhalai kanduptithu ulle thala wendum iwanuvalum ivanuvalda arasangamum
ReplyDeleteAppa yenda parthutu summa irikkorai
ReplyDelete