Header Ads



மாணவர்கள் - பொலிஸார் மோதலில் விஹாரமகாதேவி பூங்கா, யுத்தக் களமானது


அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது மீண்டும்  கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார், 10 மாணவர்களை கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக 10 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

05.38PM அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது மீண்டும் பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை தற்போது மேற்கொண்டுள்ளனர்.

4.37 PM: அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆ​ர்ப்பாட்டப் பேரணி மீது 3ஆவது முறையாக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள்  ஒன்றியத்தால் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொழும்பு, விஹாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் வைத்து பேரணி மீது, கண்ணீர்ப்புகை பிரயோகம், இன்று பிற்பகல் மேற்​கொள்ளப்பட்டது. அதனையடுத்து, இரண்டாவது தடவையாக கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தரைப் பிர​யோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் 3ஆவது தடவையாகவும் சற்று முன்னர், கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தரைப் பிர​யோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதே​வேளை, ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதியான லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக ​போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்தி போக்குவரத்து சிரமங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளர்.

பல்கலைக்கழக  மாணவர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்குமாறு கோரி  தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.