“நாட்டில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு, ஞானசாரர் காரணம் அல்ல"
இன்று -25- இடம் பெற்ற ஊடக சந்திப்பில், மாகல் கந்தே சுதந்த தேரர் ஓர் மாறுபட்ட கருத்தினை தெரிவித்திருந்தார்.
அதாவது “நாட்டில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு ஞானசார தேரர் காரணம் அல்ல. உண்மையான குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்பட வேண்டும்.
நாட்டில் ஆங்காங்கே வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றன. இதனை செய்தவர்கள் நாம் என்றால் தாராளமாக கைது செய்யலாம் ஆனால் உண்மைகள் ஆராயப்பட வேண்டும்.
எம்மைப் பயன்படுத்தி ஆட்சிக்கு எதிரானவர்கள், அல்லது எதிர்க்கட்சிகள் குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கலாம். அல்லது பள்ளிவாசல்களுக்கு அவர்களே தாக்குதல்களை மேற்கொண்டு இருக்கலாம். அல்லது ஆட்சிக்கு எதிராக உள்ளவர்களை முடக்குவதற்காக அரசு மூலமாகவே இந்த குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம் அதனால் இந்த விடயத்தில் உண்மையானவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
இந்தக் கருத்துகளை கூறியவர் மாகல் கந்தே சுதந்த தேரர்.
மொத்தத்தில் எல்லாமே நீங்கள்தானே!
ReplyDeletetry and fix cctv camara in all the mosque asap
ReplyDelete