Header Ads



நல்லாட்சி அரசாங்கம், எந்த பிரச்சினைக்கும் தீர்வைக் காணப்போவதில்லை

நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் நிலவும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வைக் காணப்போவதில்லை என்று முன்னிலை சோசலிஷக் கட்சியின் தலைவர் குமார் குணரத்தினம் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணலில் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

இந்த அரசாங்கம் இன்று மிகத் தெளிவாக இரு தரப்பாக பிரிந்து மறைமுகமாக மோதிக் கொண்டிருக்கின்றது. ரணில் தரப்பு ஒரு பக்கம், மைத்திரி தரப்பு இன்னொரு பக்கமாக இந்த மறைமுக மோதல் தொடர்கின்றது.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்த இந்த அரசாங்கத்தில் ஜனநாயக உரிமைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன.

தொழிலாளர்கள் மற்றும் ஏனையோரின் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்படுகின்றது.

அத்துடன் கண்ணீர்ப்புகைக்குண்டு பிரயோகம் நடைபெறுகின்றது. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை.

இந்த அரசாங்கம் வாக்குறுதியளித்த பத்து லட்சம் தொழில் வாய்ப்புகள், வொக்ஸ்வேகன் கார் தயாரிப்புத் தொழிற்சாலை போன்றவை போலியான வாக்குறுதிகள் ஆகிவிட்டன.

அரசாங்கத்தின் ஏனைய வாக்குறுதிகளுக்கும் இதுதான் நிலைமை.

எனவே இந்த அரசாங்கம் நாட்டின் எந்தவொரு அடிப்படைப் பிரச்சினைக்கும் உறுதியான தீர்வொன்றைக் காணப்போவதில்லை என்பது நிச்சயம் என்றும் குமார் குணரத்தினம் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.