Header Ads



சிங்­கள இன­வாதம், தடைகள் இன்றி அரங்­கே­றுகிறது, எதிர்க்க முடி­யா­த­வர்­க­ளாக முஸ்லிம் தலை­மைகள்

முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் அமைச்சுப் பத­வி­களைப் பெற்றுக் கொண்டு அர­சாங்­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வதால் பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் ஞான­சார தேரரின் நட­வ­டிக்­கை­களை கடு­மை­யாக எதிர்க்க முடி­யா­த­வர்­க­ளாக இருக்­கி­றார்கள்.  

அர­சாங்­கத்தை குற்றம் சுமத்த முடி­யா­த­வர்­க­ளாக இருக்­கி­றார்கள்.  தற்­கால சவால்­களை எதிர்­கொள்ள வேண்­டு­மாயின்  முஸ்லிம்  அர­சியல் கட்­சிகள் அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யேறி எதிர்க்­கட்சி அர­சி­யலில் ஈடு­பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லா­ளரும், அமைச்­ச­ரு­மான எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்தார்.  முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து  தெரி­விக்­கையில்;

தற்­போ­தைய அர­சாங்கம் உட்­பட முன்­னைய அர­சாங்­கங்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பொது­ப­ல­சேனா அமைப்பின் நட­வ­டிக்­கை­களை கவ­னத்தில் கொள்­ள­வில்லை. ஞான­சார தேர­ருக்கு எதி­ரான முறைப்­பா­டு­களை விசா­ரிப்­பதில் அக்­கறை கொள்­ள­வில்லை. ஆட்சி மாற்­றங்கள் இடம் பெற்­றாலும் சிங்­கள இன­வாதம் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்­டது. பலத்த எதிர்ப்­புகள் இல்­லா­ததால் சிங்­கள இன­வாதம் தடைகள் இன்றி அரங்­கே­றின. 

ஆட்­சியில் இருக்கும் அர­சாங்­கங்­க­ளுக்கு சம­மா­கவே முஸ்லிம் அர­சி­யலும் நடக்­கி­றது. முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் பேச்­சு­வார்த்­தைகள், அறிக்­கை­க­ளுடன் மாத்­திரம் முடங்கிப் போகி­றார்கள். இவ்­வா­றான சூழ்­நி­லையில் சமூ­கத்­துக்கு விடிவு  ஏற்­படப்  போவ­தில்லை. 

தற்­போ­தைய முஸ்லிம் அர­சியல்  மூலம் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுமே நன்­மை­ய­டை­கி­றார்கள். கட்­சிக்கு வாக்­க­ளித்த வாக்­கா­ளர்­க­ளுக்கு எவ்­வித நன்­மையும் கிடைப்­ப­தில்லை. எனவே முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள்  சுய­ந­லப்­போக்கைப் புறந்­தள்ளி தியாக அர­சி­யலில் ஈடு­பட வேண்டும். 

முஸ்லிம் அர­சியல், தலை­வர்கள் எதிர்­கா­லத்தில் எதிர்க்­கட்சி அர­சி­ய­லிலும் நாட்டம் கொள்ள வேண்டும். இத­னையே தமிழ் சமூகம் செய்து வரு­கி­றது. தமிழ் அர­சி­யல்­வா­திகள் எதிர்க்­கட்சி அர­சி­யலில் ஈடு­பட்டு  சமூ­கத்தின் உரி­மை­களைப் போராடிப் பெற்­றுக்­கொள்­கி­றார்கள். எனவே, முஸ்லிம் சமூகம் துப்­பு­ர­வான அர­சி­யல்­வா­தி­களை இனங்­கண்டு அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்டும். முஸ்லிம்  வாக்­கா­ளர்கள் சிந்­தித்து வாக்­க­ளிக்க வேண்டும். ஆனால் இன்று முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் தமது சுய­ந­லன்­க­ளுக்­காக வாக்­கு­களைக் கொள்­ளை­ய­டிக்­கி­றார்கள். 

இறக்­காமம் மாணிக்­க­மடு மலையில் இன­வா­தி­களால் புத்தர் சிலை வைக்­கப்­பட்­ட­தற்கு முஸ்லிம்  அர­சி­யல்­வா­திகள் பொறுப்புக் கூற­வேண்டும். அர­சுக்கு ஆத­ர­வாக  இருக்கும் அவர்கள் சிலை வைக்கும் போது எதிர்க்­க­வில்லை. இவ்­வா­றான நிலை நீடித்தால் எதிர்­வரும் 50 வருட காலத்­துக்குள் சிங்­க­ள­வர்­களின் சனத்­தொகை கிழக்கில் 80 வீத­மாக மாற்­ற­ம­டையும். முஸ்­லிம்கள் 20 வீத­மாக மாற்­ற­ம­டைந்து விடு­வார்கள். 

1952 இல் கல்­லோயா திட்­டத்தின் மூலமும் 1961 இல் புதிய அம்­பாறை மாவட்ட உரு­வாக்கம் மூலமும் முஸ்­லிம்­களின் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டன. 

1987 இல் கிழக்கில் புதிய பிர­தேச சபை சட்டம் மூலம் புதிய எல்­லைகள் உரு­வாக்­கப்­பட்டு  முஸ்­லிம்­களின் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டன.

1987 இல் கிழக்கில் புதிய பிர­தே­ச­சபை சட்­ட­மூலம் புதிய எல்­லைகள் உரு­வாக்­கப்­பட்டு முஸ்­லிம்­களின் காணிகள் அப கரிக்கப்பட்டன.

1987 க்குப் பிறகு யுத்த காலத்திலும்  வர்த்தமானி அறிவித்தல்கள் மூலமும் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. இச்சந்தர்ப்பங்களில் அரசாங்கங்களுடன் இருந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் மௌனமாகவே இருந்தன. 

எனவே முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் துப்புரவான ஓர் அரசியலை உருவாக்க திடசங்கற்பம்  பூண வேண்டும் என்றார். 

 ARA.Fareel

4 comments:

  1. பொதுவாக மக்கள் அனைவருமே சமம். முஸ்லிம்கள் என்று நாம் எம்மைத் தனித்துவமாக அழைத்துக் கொள்வதற்கு காரணம் நாம் இஸ்லாத்தைப் பின்பற்றுவதால்தான். இஸ்லாம் ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கை நெறி. அந்த வாழ்க்கை நெறியை முழுமையாகக் கற்றவர்கள்தான் அந்த சமுதாயத்திற்கு தலைமைத்துவம் அளிக்க முடியும். அவர்கள்தான் உலமாக்கள் - மார்க்க அறிஞர்கள்.

    இலங்கை முஸ்லிம்கள் ஏனைய உலக மக்களால் பாராட்டப்படக்கூடிய ஒரு சமுதாயமாக இருப்பதற்கு அகில இலங்கை உலமா சபையின் தன்னலமற்ற பணிகள் பின்புலமாக உள்ளது பாராட்டப்படக்கூடியதாகும்.

    இஸ்லாத்தின் பெயரால் அரசியல் செய்பவர்கள் அந்த மார்க்க அறிஞர்களை தம் தலைவர்களாக ஏற்று அவர்களின் வழிகாட்டலின்படி தமது பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

    தாம் தெரிவு செய்யும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இஸ்லாத்தை முழுமையாகப் கடைப்பிடிப்பவர்களா? மார்க்கத்தையும் மார்க்க அறிஞர்களையும் மதிப்பவர்களா? என்பதை உறுதி செய்து கொள்ளும் பொறுப்பு வாக்காளர்களுக்கு உரியதாகும்.

    நாம் ஒவ்வொருவரும் அமானிதங்களை சுமந்த பொறுப்பாளர்களே. அவை பற்றி நாம் நிச்சயமாகக் கேற்கப்படுவோம்.

    ReplyDelete
  2. Pazavi illati ippadi than pesuwarhal

    ReplyDelete
  3. "THE MUSLIM VOICE HAS INFORMATION THAT THE YAHAPALANA GOVERNMENT HURRIEDLY CALLED A PRESS/MEDIA CONFERENCE TO ANNOUNCE THE CABINET/GOVERNMENT DECISION BECAUSE OF THE PRESSURE PUT ON THE GOVERNMENT BY THE UN AND THE UNITED STATES OF AMERICA ON MONDAY THE 22nd., MAY 2017.
    THE MUSLIM POLITICIANS OR THE MUSLIM CIVIL SOCIETY HAD NOTHING TO DO WITH THIS AS THE GOVERNMENT DOES NOT CARE THESE DECEPTIVE POLITICAL AND SOCIAL ORGANIZATION AS SHOWN BY THEIR ACTIONS OVER THE LAST 2 YEARS WITH REGARDS TO THE MUSLIM ISSUES. PRESIDENT MAITHRIPALA SIRISENA, PM. RANIL WICKREMESINGHE ARE EVEN EXTREMELY WORST THAN MAHINDA RAJAPAKSA.
    Globe-Trotting Maithri Was Too Busy To Meet Muslim MPs As BBS Led Groups Continue Their Rampage, this week.
    WHAT WE NEED IS "NEW THINKING" INSHA ALLAH. THIS IS WHY "THE MUSLIM VOICE" IS PRAYING IT (since January 2015) IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE “CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS” TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE. It is by only expressing and showing our political strength unitedly that we can gain our position as equals in the country. We can support any political party or ideology, but emerging as a “NEW POLITICAL FORCE”, EVEN IN THE FORM OF A MUSLIM POLITICAL ALLIANCE" we will stand to gain what we are loosing, INSHA ALLAH.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  4. நீங்கள் தலைவராக இருந்திருந்தால் எதிரத்திருப்பீர்களா?
    மானங்கெட்ட பிழைப்பு. நீங்கள் சோறுதான் சாப்பிடுகிறீர்களா?
    இந்த அரசியல்வாதிகளுக்கு வெக்கம் , மானம் ரோஷம் எதுவுமே இல்லையா?

    ReplyDelete

Powered by Blogger.