சிறிலங்காவில் வெள்ளம், மீட்பு பணிகளில் இந்தியக் கடற்படை
சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர மீட்பு மற்றும் மருத்துவ உதவிப் பணிகளில் இந்தியக் கடற்படையும் ஈடுபட்டுள்ளது.
சிறிலங்காவில் 14 மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபடுவதற்காக இந்தியக் கடற்படைக் குழுக்கள் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஐஎன்எஸ் கிர்ச் என்ற இந்தியக் கடற்படைக் கப்பல் உதவிப் பொருட்கள் மற்றும் முதலாவது மீட்பு மற்றும் உதவிக் குழுக்களுடன் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பலில் வந்த இந்தியக் கடற்படையின் மீட்புக் குழுக்கள், காமினி வகை மிதவைப் படகுகளுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அங்கு மீட்புப் பணிகளில் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து இந்திய கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் இந்திய கடற்படை மருத்துவக் குழுக்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த ஆரம்பித்துள்ளன.
மேலும், மீட்புக் குழுக்கள், மருத்துவக் குழுக்களுடன் இரண்டு இந்தியக் கடற்படைக் கப்பல்கள் நாளை கொழும்பு வரவுள்ளன.
இதை சாக்காகவைத்து இந்திய ரோ உளவுத்துறை தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவுவர்
ReplyDelete