Header Ads



''நோன்பு'' சாப்பாடுகளை சுற்றியே, மனம் சுழல்கிறதா..?

-Fauzuna Binth Izzadeen-

"நேற்று நோன்பு திறக்க பெட்டீஸ் தான் செஞ்ச. இன்றைக்கு பேஸ்ட்ரி செய்யணும். பேஸ்ட்ரிக்கு மீனும், ஸஹருக்கு இறாலும் வாங்கிட்டு வாங்க. மகளுக்கு இன்றைக்கும் கோழி தின்ன ஏலாவாம்".

"சின்ன மகனுக்கு கறியோட ஸஹருக்கு தின்ன ஏலாவாம், தயிரும் கோழி குட்டு வாழைப்பழமும் வாங்குங்க"

இது போன்ற உரையாடல்களை, கட்டளைகளை நமது வீடுகளிலும் கேட்டிருப்போம். கேட்கலாம்...

பெயர்கள்,பொருள்கள் மாறலாம் அவ்வளவே.

"இப்தாருக்கு என்ன கிடைக்கும்? தண்ணீர் மட்டும் தானா?பேரீச்சம் பழமும் வருமா?யாராவது கஞ்சி,சமோசா கொடுப்பாங்களா?

ஸஹருக்கு நேரம் பிந்த முன் சாப்பாட்டுப் பார்சல் கைக்கு கிடைக்கமா?நேற்று போல இன்றும் வாழைப்பழமும் தண்ணீரும்தானா? "

இது போன்ற எண்ணங்கள் கண்ணீரூற்றி புதைக்கப் பட்டுக் கொண்டுமிருக்கலாம்.எமது உறவுகள்,நட்புகள்,சகோதரர்கள் எத்தனை பேரின் நிலைமை இதுவென தெரியவில்லை.அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.

மற்ற நாட்களில் முகாம்களில் இருப்பதே பெரும் வலி. அதை சொல்ல முடியாது. அதுவும் ரமழானில்....

ஒரு பார்சல் சோற்றுக்கும், ஒரு கட்டி சவர்க்காரத்திற்கும் ,ஒரு பக்கட் பால் மாவிற்கும் வரிசையில் முண்டியடித்துக் கொண்டிருப்பதன் வலி எப்படியிருக்கும்?

அதுவும் இது வரை செழிப்பாய் வாழ்ந்தவரென்றால்.............?

அதோ கஷ்டப்படும் எம் உறவுகளின் நிலையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். நம்மை அந்த ரஹ்மான் எப்படி பாதுகாத்திருக்கிறான் என்பது புரியும்.

அவர்களை கஷ்டப்படுத்தி சோதிக்கிறான்.எங்களை கஷ்டப்படுத்தாமல் சோதிக்கிறான்.

எம்மை பாதுகாத்து, வீடுகளில் வைத்திருக்கிறானே, ஒரு முறை அவனை சுஜுது செய்தோமா??

பெருநாளைக்கு ஆடை தெரியும் அளவில் இருக்கிறோமே, அவனது பேச்சை புரிய எவ்வளவு நேரம் ஒதுக்கினோம்?

ஸஹர் நேரத்தில் வரிசையில் நிறுத்தாமல் விட்டிருக்கிறானே, கூடுதலாக எத்தனை ரக்அத் கியாமுல் லைல் தொழுதோம்??

இப்தாருக்கு மேசைகளை அலங்கரிக்கும் நிலையில் வைத்திருக்கிறானே, அவனை துதிக்க,அவனிடம் பாவ மன்னிப்புக் கோர எவ்வளவு நேரம் ஒதுக்கினோம்??

இது பற்றி சிந்தித்தோமா????

இல்லை, இன்னும் நோன்பு நோற்கும், துறக்கும் சாப்பாடுகளை சுற்றியே மனம் சுழல்கிறதென்றால் எங்களைப் போன்ற அபாக்கியசாலிகள் யாரும் இருக்க முடியாது.

Fauzuna Binth Izzadeen

2 comments:

  1. Well said sister.Most of our brothers and sisters don't feel others pain until they taste. Let Allah azza wajal open our eyes with the kindness on our society. AAMEEN. AAMEEN.

    ReplyDelete
  2. In the month of Ramazan Muslims fast during the day
    for one month and EAT FOODS OF THREE MONTHS between
    break fast and Sahar . Complete opposite of what is
    expected from FASTING . And after month end all are
    so happy about fasting the whole month . At the end
    grocers are the losers !

    ReplyDelete

Powered by Blogger.