Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளின் சந்திப்பில், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்..!

முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளை தடுத்துநிறுத்துவதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள் மற்றும் பாராளுன்ற உறுப்பினர்கள் மட்டத்திலான உயர்மட்டக் கலந்துடையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை (19) தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சில் நடைபெற்றது.

அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சந்திப்பில், முஸ்லிம் விரோத செயற்பாடுகளால் தற்போது முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் அசாதரண சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இவ்விடயங்களை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்து, அவற்றுக்கான தீர்வினைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டது.

இதற்காக ஜனாதிபதியிடம் சந்திப்பொன்றை மேற்கொள்ளும்நோக்கில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடிதம் ஒன்றை அனுப்புவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ள கடும்போக்குவாத கும்பல்களின் செயற்பாடுகள் தொடர்பில்; அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய காட்டமான கருத்துகளை தெரிவித்தனர். அத்துடன், இதன் பின்னணியில் செயற்படும் இனவாத சக்திகள் தொடர்பாக இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம்,  ரவூப் ஹக்கீம், அமைச்சர் பைசர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர்களான மரிக்கார், முஜிபுர் ரஹ்மான், எம்.எச்.எம். நபவி, இஷாக் ரஹ்மான் ஆகியோர் பங்குபற்றினர்.


17 comments:

  1. Risat sir amichchar illayama

    ReplyDelete
    Replies
    1. Remba mukkiyem... iverkal anaivarum awerkalukkum awarkalin kudumpaththiku mattumthan amaichcherkal.. Muslim samukaththitkku alla. Entha kalaththil iwarkal irukkirarkal... janathipathikku kaditham anuppi athekku awar pathil anuppi.. awerra seyalalarukku enna faxa anuppuwarkal.

      Delete
  2. They went to the 5 star hotel for party.

    ReplyDelete
  3. ஏன் ஜனாதிபதி குழந்தை யார்? அவர் செய்திகள் படிக்க மாட்டாரா.
    முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் 21 உறுப்பினர்களும் முதுகு எலும்பு இல்லாதவர்கள்.இவர்கள் அனைவரும் உண்மையான முஸ்லிம்களும் இல்லை

    ReplyDelete
  4. மற்ற எம்பிமார்கள் தூக்கம் போல

    ReplyDelete
  5. Our so called leader (sic) charlatan Rauf appears to b attending wedding feast. He thrives on our death n destruction.
    He just doing social service just like Colombo 7 ladies.

    ReplyDelete
  6. Haleem...is a favorite food in Pakistan and the same here in SL...he doesn't speak at all.

    What is this letter? Take the phone and individually give a call to President and PM and clearly say this has to be stopped for further support to this government. Simple.

    All above is Drama is to make us fools. Are we? Bring back MR and he will teach these guys the lesson.

    ReplyDelete
  7. கடிதம் அனுப்பி முடிவு கிடைக்குமா. ஏன் உங்களால் வேரெந்த ஒருமுடிவும் எடுக்கமுடியதா. இதைத்தானே கடந்த அராசாங்கத்திலும் செய்துவந்தீர்கள். ஏன் உங்களால் பாராளுமன்றத்தில், அமைச்சரவையில் பேசமுடியாதா. இல்லாவிட்டால் அரசாங்கதிக்கு தொடர்ந்து கொடுத்துவரும் ஆதரவை நிறுத்தமுடியாதா? எழுமென்றால் அப்படி சொல்லிப்பாருங்கள் 24 மணிக்குள் ஞானசார அடைக்கப்படுவார். இனவாதம் உடனே நிறைவுக்குவரும். ஆனால் அப்படி உங்களால் யாருக்கு சொல்லமுடியும் ரிஷத்தை தவிர.

    ReplyDelete
  8. No use meeting president, issue stunt notice, all of you with backbone.
    President and Prime minister knew well what is happening and who is behind these dramas. Pointless meeting them, just act in the way they feel otherwise, you all should resign the post and give way to the people who can do this through the parliament or other ways.

    ReplyDelete
  9. He do not care these Jokers' letter......

    ReplyDelete
  10. The president and the prime minister are very well aware of what's happening in the country. No use in issueing statements and sending letters to them instead withdraw your support to the government and they will take necessary steps to bring it to an end. If you really love your community and you all are with backbones, do it at once.

    ReplyDelete
  11. கடிதம் என்ன காதல் கடிதமா?நீங்கள் புத்தியுள்ளவர்கள் என்று பார்த்தால் வெறும் மாங்காய் மடையர்கள் போல் தெரிகிறது

    ReplyDelete
  12. We are not stupid! Just request a time in the parliament to discuss this matter.

    ReplyDelete
  13. Good jock .......letter for what? They think that we are fool

    ReplyDelete
  14. அப்ப - இவனுவ ஒருத்தனையும் கெபினட் கூட்டத்துக்கூட எடுக்குரது இல்லயா மைத்திரி மாமா ???????????????????????????????????????

    ReplyDelete
  15. அனுப்புற கடிதத்தின் முத்திரை செலவு யாருடையது என்று முடிவு எடுக்கப்பட்டதா???

    ReplyDelete

Powered by Blogger.