ரணில் மீது, அமைச்சர் யாப்பா விமர்சனம் - செய்தியாளர் மாநாட்டில் சம்பவம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோர் மீது அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு இன்று -31- அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போதே அமைச்சர் யாப்பா இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
குறித்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வானிலை அவதான நிலையத்தின் தகவல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்திருப்பதாகவும், அமைச்சர் ஜோன் அமரதுங்க அவற்றை கிண்டல் செய்வதாகவும் அதுகுறித்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சரின் கருத்து என்னவென்றும் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் யாப்பா, நாட்டின் பிரதமர் வானிலை அவதான நிலையத்தின் தகவல்களை ஏற்றுக்கொள்ள முடியாது, நம்ப முடியாது என்று தெரிவித்திருப்பாராக இருந்தால், இன்னொரு அமைச்சர் அவற்றை கிண்டல் செய்பவராக இருந்தால் வானிலை அவதான நிலையத்தை மூடிவிடுவதே சிறந்தது என்று கோபமாக பதிலளித்துள்ளார்.
இதன்போது குறுக்கிட்ட அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவ்வாறு வானிலை அவதான நிலையத்தின் தகவல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவிக்கவில்லை என மறுப்புத் தெரிவித்துள்ளார்.
வானிலை அவதான நிலையத்தின் தகவல்களில் சிற்சில குறைபாடுகள் இருப்பதாக மட்டுமே பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளதாகவும் கலாநிதி ரங்க கலன்சூரிய தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
இந்த ரணில் எல்லாம் வீட்டுக்கு அனுப்பி வைத்து நாட்டுக்கு நல்ல தைரியமுள்ள ஒரு இளம் தலைவரை தெரிவு செய்ய வேண்டும்.
ReplyDelete