இலங்கையில் ரமழான் இரவுகளில், தொழுகை நடத்துபவர்கள், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்..!
-அல் - ஹாபிழ் ஸாஜித் அஹமட்-
அஸ்ஸலாமு அலைக்கும்
கசப்பான ஒரு உண்மை காலத்தின் தேவை கருதியும் இறைவனின் தன்டனையை பயந்தவனாகவும் சொல்லியே ஆக வேண்டும் என்பதால் சொல்லுகிறேன். தொழுகை நடாத்தும் இமாம்களில் குறிப்பாக ரமழான் இரவு நேரத் தொழுகை நடாத்தும் இமாம்கள்
சிலர் ஹாபிழ்களாக இருப்பார்கள்
சிலர் மௌலவிகளாக இருப்பார்கள்
சிலர் ஹாபிழ்&மௌலவிகளாகவும் இருப்பார்கள்
சிலர் சாதாரணமாக குர்ஆனின் சில பகுதிகளை மட்டும் மனனம் செய்தவர்களாக இருப்பார்கள்
இதில் நான் சொல்லவரும் மிக முக்கியமான விடயம் என்னவென்றால்
தொழுகை நடாத்துபவர்களில் பெரும்பான்மையானவர்கள் பார்க்காமல் குர்ஆனை ஒதுகின்ற நேரத்தில் பிழை விடத்தான் செய்கிறார்கள் அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கொள்ள முடியாது
#எப்படியெல்லாம் #பிழை #விடுவார்கள் #விட்டவர்கள் #என்னவெல்லாம் #செய்வார்கள்
01. ஒரு வசனத்தை ஓதிக்கொண்டு போகின்ற நேரத்தில் ஒரு இடம் மறந்து போகும் நேரத்தில்
02. சிலர் அந்த இடத்தில் நிறுத்தி விட்டு ருகூவுக்கு போய் விடுவார்கள்
03. சிலர் அதே மாதிரியான வசனங்கள் வேறு சூராக்களில் வரும் எனவே இந்த இடத்தில் அவர்களுக்கு அந்த தொடர் மறந்ததால் அவர்களுக்கு ஞாபகம் இருக்கும் வேறு சூராவின் அதே மாதிரியான அமைப்பில் வரக்கூடியதை ஓதி முடிப்பார்கள்
04. சிலர் நான் ஓதுவது பிழை என்று தெரிந்து கொண்டே ஏதாவது ஒன்றை ஓதி முடிக்க வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே பிழையாகவே ஓநுவார்கள்
05. சிலர் ஒரு ஸூராவின் ஒரு வசனத்தில் ஆரம்பிப்பார்கள் எப்படியும் 10 வசனங்கள் ஓதி முடிக்கும் போது (ருகூவுக்கு செல்லும் போது) ஒரு 05 ஸூராக்களில் உள்ள ஓர் இரு வசனங்களையும் இணைத்தே ஓதி விடுவார்கள்
06. சிலர் பிழை விட்டால் பின்னால் உள்ளவர்கள் யாராலும் திருத்தி தருவார்களா? என்று பார்ப்பார்கள் யாரும் திருத்தி தரவில்லை என்றால் தடுமாறி தடுமாறி இருந்து விட்டு சம்பந்தமே இல்லாத வேறு ஒரு பகுதியை ஓதுவார்கள்
07. சிலர் நமக்கு பின்னால் தொழுபவர்களுக்கு நான் ஓதும் இந்த பகுதி பாடம் இல்லை என்ற ஒரு தைரியத்தை வைத்துக்கொண்டு குர்ஆனில் இல்லாத வசனங்களையும் ஓதுவார்கள்
இது போன்று இன்று இன்னும் ஏராளமான விடயங்கள் பொதுவாக எல்லாப் பள்ளிகளிலும் குறிப்பிட்டு ஒரு இடத்தை சொல்ல முடியாத அளவிற்கு நடக்கின்றது. இதில் தொழுவிப்பவர்கள் அல்லாஹ்வை அதிகம் அஞ்சிக்கொள்ள வேண்டும் பின்னால் தொழுபவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி அல்லாஹ்வின் வேதத்தில் விளையாடி விடக்கூடாது
நாம் இன்று தொழுகையில் ஓத இருக்கும் இடத்தை பல தடவைகள் மீட்டி விட்டே தொழுகை நடாத்த வர வேண்டும் அதிலும் திருப்தி இல்லாவிட்டால் தொழுவிக்கும் இடத்திற்கு முன்னால் அல் குர்ஆன் பிரதி ஒன்றை வைத்து பார்த்தாவது ஓத வேண்டும். அல்லாஹ்வின் வேதத்தில் வேண்டும் என்றே நாம் விளையாடினால் அல்லாஹ்வின் தன்டனை நமக்கு கண்டிப்பாக வரும் என்பதை பயந்து கொள்ள வேண்டும்
///பள்ளி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் இந்த விடயத்தில் அதிகம் கவனம் எடுக்கவும். பின்னால் இருந்து குர்ஆனை கையில் வைத்துக்கொண்டு தொழ இஸ்லாம் அனுமதிக்கவில்லை அது தக்பீருடைய நிலையை மற்றும் ஏராளமான உறுப்புக்களின் நிலையை கேள்விக் குறி ஆக்கும்
மாறாக அவர் ஓதுவதை சரி பார்க்க குர்ஆன் ஓத திறமை வாய்ந்த ஒருவரை சரி பார்க்க வைக்கும் முயற்சியை எடுத்தால் தொழுவிப்பவரும் விழிப்படைந்து விடுவார். அல்லது பின்னால் உள்ளவர்களுக்கு பொதுவாக அனைவருக்கும் பாடமான பகுதிகளை ஓதுமாறும் அவரிடம் வேண்டலாம். இது போன்று இன்னும் சில நல்ல மசூராக்களை செய்து இதற்கான நடவடிக்கைகளை கட்டாயம் எடுக்கப் பட வேண்டும்
குறிப்பு: நாம் சிலருக்கு பின்னால் தொழுகின்ற நேரத்தில் பயப்படுகிறோம் நாமும் பாவியாக மாறி விடுவோமா என்று??? காரணம் ஓர் இரண்டு பிழைகள் விட்டால் அதை திருத்திக் கொடுக்கலாம் ஓதுவதில் அனைத்தும் பிழை என்றால் என்ன செய்வது??
இப்படியான நிகழ்வுகள் ஏராளமான பள்ளிகளில் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது பள்ளி நிர்வாகிகள் அதிகம் கவணம் செலுத்தவும்.
In Tarawih Some huffaz recite Qur'an in high speed. They try to finish the 1 juzz in short time. Many thajweed rules are ignored.
ReplyDeleteIt's FERRARI not TARAWI
Hahaha @ Abu Sarah- yes it's Ferrari not Tarawi
Deletepakkaththil quraanil therchchipetra oruwarai ukkarawaiththu awathanikkachcheiwadutan solution Colombo 2nd cross street red masjidilum appadithan seikirarkal
ReplyDelete