நல்லாட்சியில் ஞானசாரரின், நிகழ்ச்சி நிரல் இதுதான்..!
நமது சமூகம் றமழானை காத்திருக்கும் சந்தர்ப்பத்தில் பொதுபலசேனாவின் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. இலங்கை வரலாற்றில் ஒவ்வொரு காலத்திற்கும் ராவய,சிங்கள பல மற்றும் உருமய என பல்வேறு அமைப்புகள் நாட்டில் உருவாகாமல் இல்லை.இருந்தும் பொதுபலசேன மட்டும் நீண்டகால ஆயுள் உடையதாக உள்ளது.இதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமாக உள்ளது.
நல்லாட்சியில் இவரின் நிகழ்ச்சி நிரல்:;;
1-தற்போதைய அரசாங்கம் வடமாகாண முஸ்லீம்களின் வில்பத்துகாணிப் பிரச்சனையில் இவரை களத்தில் இறக்கி சதுரங்க ஆட்டம் ஆடியது.
2-தமிழ்தேசியக் கூட்டமைப்பினரின் குரல்வலையை மட்டக்களப்புக்கு அனுப்பி அடக்கியது.
3-முக்கிய முஸ்லீம் தலமைகளுடன் நேரடியாக இல்லாமல் வேறுமுறையில் தொடர்பை வெளிநாட்டில் உருவாக்கி கொடுத்துள்ளது.எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் கிழக்கில் இவரின் செயற்பாடு முஸ்லீம்களை தமிழ்தேசியக் கூட்டனிக்கு எதிராக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
4-தற்போதைய அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் அதிகாரப் பகிர்வை இழுத்தடிக்க இவரை தற்போது களத்தில் இறங்க வைத்துள்ளனர்.
5-அதேநேரம் தற்போதைய நல்லாட்சியை ஆர்ப்பாட்டம் மற்றும் நெருக்குதல்களால் முடிவிற்கு கொண்டுவருவதற்கு உதயகம்பன்வில போன்றவர்கள் இன்னொரு நிகழ்ச்சியையும் வழங்கியுள்ளனர்.
இந்த தேரோவை வைத்து நல்ஆட்சியை கவிழ்க்க முடியும் என்று கூட்டு எதிர்க்கட்சியும்,,சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை இழுத்தடித்து,சிறுபான்மை தலைவர்களை கொத்தடிமையாக்க நல்லாட்சியில் சிலரும் பங்குபோட்டு விளையாடுகின்றனர்.
இருந்தும் பின்வரும் கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்காதவரை,நமது அடுத்த தலமுறைக்கும் இந்த தேரரர் கதை முடிவில்லா ஒன்றுதான்.
1)இந்த தேரோவினால் மஹிந்த தோற்றதாககூறிய சந்திரிக்கா,ரணில்,ராஜித்த மற்றும் மைதிரி ஆகியவர்கள் வேடிக்கை பார்ப்பது ஏன்?
2)கடந்த ஆட்சியில் இவரை கடுமையாக விமர்சித்த ரஞ்சன் ராமநாயக்க,சஜித் பிரேமதாஷ,சுஜீவ மற்றும் அர்ஜுன போன்ற அமைச்சர்கள் வாய்மூடிகளாக இருப்பது ஏன்?
3)மஹிந்த இவரை ஆதரித்தமைக்காகவே தாம் கட்சிமாறி ஆட்சியை மாற்பியதாக கூறும் முஸ்லீம் தலைகள் உற்பட 21 உறுப்பினர்களும் மௌனம் காப்பது ஏன்.இவர்களால் இவருக்கு எதிராக தனிநபர் பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்காதது ஏன்?
4)பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தமிழ்தேசியக்கூட்டனி,மட்டக்களப்பு மதுதான உற்பத்திக்கு எதிரான பராட்டத்திற்கு மட்டும் நல்லுறவை பேசுகிறது.ஞானதேர விடயத்தில் பொட்டிப் பாம்பாக உள்ளது.
5)கோதபயாவும் இல்லை,மஹிந்த அரசும் இல்லை.யாரின்மீது பழியைப் போடுவது???
ஆகவே படித்த, முற்போக்குள்ள முஸ்லீம் இளைஞர்கள் மற்றும் உலமாக்கள் மிகவும் நிதானமாக சிந்டிக்க வேண்டும்.நமது சமூகத்தை பிரச்சனைக்கு உரியவராக தொடர்ந்து வைத்திருப்பதற்கான சூழ்ச்சியே இது. அன்று ஆட்சி மாற்றத்திற்கு விடுதலைப் புலிகளை பயன்படுத்தியது போல,இன்று ஞானதேரோவை வைத்து அரசியல் தலமைகள் சதுரங்க ஆட்டம் விளையாடுகிறது.ஆதலால் சிங்கள மக்கள் மற்றும் புத்திஜீவிகள் இந்த உண்மையை அறியாமல் இல்லை.
நமது சமூகம் இந்த ஞானதேரவின் சீசனுக்கு மட்டும் விடுமுறையாக வந்து போகும் மிலேச்சத்தனத்தை பக்குவமாகக் கையாளவேண்டும்.நமது தலமைகளுக்கும் இனவாதத்தை இலகுவில் உருவாக்கவும்,வாக்குப்பலத்தை அதிகரிக்கவும் ஞானதேரர் தேவையாகவே உள்ளார்.
பல தரப்பாலும் பாதுகாக்கப்படும் இந்த பயங்கரவாதி ஞானசார யாருக்கும் அடங்க மாட்டான் காரணம் எந்த அரசு வந்தாலும் அவனை தாலாட்ட ஆள் உண்டு அதனால் அவனுக்கு கவலை இல்லை.ஆகவே நாம் செய்ய வேண்டுயயது மட்டும் என்ன?அல்லாஹ்விடம் துஆ செய்வது நமது தொழில்களை ஹராத்தில் இருந்து வேறு படுத்தி ஹலாலாக மாற்றிக்கொள்வது இல்லை என்றால் துஆ அங்கிகரிக்கப்பட மாட்டாது.அரசியல்வாதிகள் ஓன்று பட்டால் இருபத்தி நான்கு மணிக்குள் இவன் அடங்குவான் அடக்குவார்கள்.முஸ்லிம்களின் சாபக்கேடு இந்த அரசியல்வாதிகள்தான்.இலங்கையில் பருமாவின் நிலை உருப்பட்டாலும் இந்த றவுபும் ரிஷத்தும் ஒற்று சேர மாட்டார்கள்.இவர்கள் இஸ்லாத்துக்காக முஸ்லிம்களுக்காக அரசியல் செய்தால் ஏன் ஒன்றுபட முடியாது.இவர்களை ஒற்றுமைப்படுத்த பல தடவை உலமாக்கள் முயற்சி செய்தார்கள் முடியவில்லை,சூரா கவுன்சில் பல முயற்சி செய்தது ஒன்றுபட முடியவில்லை.இவ்வாறான கல் நெஞ்சம் பிடித்தார்கள்.இவர்களின் உதவி நமக்கு எப்போதும் கிடைக்கபோவது இல்லை.இப்படிப்பட்ட நாடகம் நடிக்கும் அரசியல்வாதிகள் சிறுபான்மையாக கஷ்டத்தில் வாழும் நமக்கு எவ்வகையியும் பிரயோசனப்படமாட்டாது.அல்லாஹ்வுடைய பயம் உள்ளத்தில் இருந்தால் இவர்கள் இப்படி ஜாஹிளியாகாலத்து மக்களைப்போன்று பகைமை பாராட்டி வாழ்வார்களா?மனிதன் என்றால் பிரச்சினை வரத்தான் செய்யும் மூன்று நாள் அதையும் தாண்டி பகைமை பாராட்டினால் அவனுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.என்பதை உணராத இந்த அரசியவாதிகளின் பின்னால் நாம் இன்னும் போகவேண்டிய அவசியம் இல்லை.உடனடியாக இந்த அரசியல்வாதிகளுக்கு பாடம் படிப்பிக்க ஈமானுள்ள புத்தி ஜீவிகள்,பணம் படத்த தனவந்தர்கள் முன்வர வேண்டும்.இல்லையன்றால் இலங்கையில் இன்னும் ஒரு இனக்கலவரம் வருவதை தடுக்க முடியாது.கண்களால் பார்க்கின்றார்கள்,காதுகளால் கேட்கின்றார்கள்,பல நாடுகளில் முஸ்லிம் பெண்கள் கட்பளிக்கபடுவதை,தீயில் இட்டு கொளுத்தப்படுவதை,ஒரு முஸ்லிமை பலர் அடித்தே கொள்ளுவதை,இதையெல்லாம் பார்த்துக்கொண்டும் இன்னும் குருடனாகவும் செவிடனாகவும் இருக்கும் இந்த அமைச்சர்கள் ஈன விளித்து எழ முடியவில்லை.சொகுசுகளை விட முடியவில்லை.இந்த அரசாங்களால் தோல்வியை தழுவும் இல்லை வந்தால் மகிந்தவின் பக்கம் சமுதாயத்துக்காக செல்கின்றோம் என்று சொல்லுக்கொண்டு அங்கும் போவார்கள் இந்த வெட்கம் கெட்ட அரசியல் அமைச்சர்கள்.
ReplyDelete