வெள்ளை மாளிகையில், இப்தாருக்கு மறுப்பு
அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையில் ரமலான் பண்டிகையை துவக்கி வைப்பதற்கு அந்நாட்டு வெளியுறவு துறை செயலாளர் மறுப்பு தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமியர்களின் முதன்மை பண்டிகையான ரமலான் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவில் குடியரசு அல்லது ஜனநாயக கட்சி என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அக்கட்சியை சேர்ந்த வெளியுறவு துறை செயலாளர் வெள்ளை மாளிகையில் ரமலான் பண்டிகையை துவக்கி வைப்பது அல்லது இறுதி நாளில் பங்கேற்பது பல ஆண்டுகளாக பின்பற்றி வரும் ஒரு மரபாகும்.
ஆனால், தற்போதைய டிரம்ப் தலைமையிலான அரசு இந்த மரபை மீறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளை மாளிகையில் ரமலான் பண்டிகையை துவக்கி வைக்க தற்போதையை வெளியுறவு செயலாளரான ரெக்ஸ் டில்லர்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், இந்த அழைப்பினை ரெக் டில்லர்சன் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்லாமியர்களின் கோரிக்கையை நிராகரிப்பதன் மூலம் டிரம்ப் அரசுக்கு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வு அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய கிலாபத்தின் அமீரின் அலுவலகத்தில் நடந்தேறவேண்டிய ஓர் வைபவத்தை எங்கு போய் எதிர்பார்க்கிறார்கள் நம் சமூகம்!
ReplyDeleteஇந்தக் கனவு நிறைவேற இப்போது நாம் கூட்டாகத் தொழுகிறோமே சுபஹுத் தொழுகை, இதனை இந்த ராமலானுக்கு அப்பாலும் அடுத்த ரமலான் வரையாவது எம்மால் தொடர்ந்து தொழ முடியும் என்றால், இன்ஷா அல்லாஹ், சகலவற்றின் மீதும் ஆற்றல் பெற்ற அல்லாஹ் தனது அருளால், அதற்குள் அதனை நனவாக்கப் போதுமானவன்.
அல்லாஹ்வின் பெயரில் உறுதி எடுத்து முயற்சி செய்வோமா?