Header Ads



வன்முறையில் ஈடுபடும் பிக்குகளுக்கு கிடைக்கும் சலுகை, முஸ்லிம்கள் நம்பிக்கையிழக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது - சிராஸ்

நாட்டில் தற்போது தோன்றியுள்ள முஸ்லிம்ளுக்கு எதிரான நெருக்கடிகளுக்கு பௌத்த தலைமைப் பீடங்களும் காரணமாகும் என மூத்த சட்டத்தரணியான சிராஸ்  நுர்த்தீன் தெரிவித்தார்.

அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

சட்டம் அமுல்படுத்தவதும், நீதி நிலைநாட்டப்படுவதும் தாமதிக்கப்படுகிறது. இதனால் முஸ்லிம்கள் நம்பிக்கையற்ற நிலைக்கு செல்லும் அபாயம் ஏற்படலாம். இது ஒரு நாட்டிற்கு சிறந்தது அல்ல.

ஒரு சமூகம் அல்லது ஒரு தரப்பு சட்டத்திலும், நீதியிலும் நம்பிக்கையிழப்பது அபாயகரமாகி; அது வன்முறைக்கு காரணமாகிவிடும்.

எனவே தற்போதுள்ள நிலை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

புத்தர் போதித்த தர்மத்திற்கு எதிராக வன்முறையில் நம்பிக்கை கொண்டுள்ள பிக்குகள்,  தொடர்பில் பௌத்த தலைமைப் பீடங்கள் உரியவிதத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட பிக்குகளின் காவி உடைகளை அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் ஏனைய பிக்குகள் வன்முறையில் ஈடுபட நாட்டம் அற்றிருப்பர்.

எனினும் வன்முறையில் ஈடுபடும் பிக்குகளுக்கு கிடைக்கும் சலுகையானது, அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கவும், முஸ்லிம்கள் நம்பிக்கையிழப்பு நிலைக்குமே தள்ளியுள்ளது எனவும் தெரிவித்தார்

No comments

Powered by Blogger.