பௌத்தர்களிடம் ஹீரோ ஆக, முஸ்லிம்களை எதிர்க்கும் ஞானசாரர் - சிராஸ் நூர்தீன்
ஞானசாரர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் தன்னை சிங்களவர்களிடம் ஹீரோவாக காட்டிக்கொள்ள ஞானசாரர் அடாவடிச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக மூத்த முஸ்லிம் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தனக்கு சிங்கள பௌத்தர்களிடம் செல்வாக்கு உள்ளது என காண்பிக்கவும், அந்த போலியான செல்வாக்கிலிருந்து தப்பிக்கவும் ஞானசாரா முயல்கிறார். இதற்காக அவர் கையில் எடுத்துள்ள ஆயுதம் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் ஆகும்.
அத்துடன் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் மூலம், இந்ந அரசாங்கத்திடமிருந்து முஸ்லிம்களை பிரிக்கவும் முயலுகிறார். இந்த அரசாங்கம் தொடர்பில் முஸ்லிம்கள் ஏற்கனவே விசனமடைய ஆரம்பித்துள்ளனர். ஞானசாரர் தொடர்பிலும் அவரது இனவாதம் தொடர்பிலும் முஸ்லிம்கள் மேலும்மேலும் இந்த அரசாங்கத்திடமிருந்து பிரிந்து செல்ல முயலுவர்.
இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறுகிய அரசியல் இலாபம் தேடுவதற்காக ஞானசாரர் காத்திருப்பதாகவும் சிராஸ் நூர்தீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் மேலும் சுட்டிக்காட்டினார்.
Post a Comment