Header Ads



எந்நேரத்திலும் கைதாகலாம், என்ற அச்சத்தில் ஞானசாரர் - மனோகணேசன்

"மகாநாயக்க தேரர்கள் முட்டாள்கள். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. சிங்கள மக்களை நானே பிரதிநிதித்துவம் செய்கின்றேன்" என ஞானசார தேரர் தெரிவித்திருந்ததாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

அமைச்சர் மனோகணேசன் அலுவலகத்தில் அண்மையில் ஞானசார தேரர் வாக்குவாத்தில் ஈடுபட்டிருந்தார். இது குறித்த கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

நேற்றைய தினம் கண்டிக்கு சென்றிருந்த ஞானசார தேரர் மகாநாயக்க தேரர்களை சந்தித்து புலம்பிக்கொண்டிருந்ததை காணமுடிந்தது.

எனினும், அண்மையில் தன்னுடைய அமைச்சிற்கு வந்த ஞானசார தேரர் மகாநாயக்க தேரர்களை தரக்குறைவாக பேசியிருந்தார். இது குறித்த காணொளிகள் கூட என்னிடம் இருக்கின்றன.

ஞானசார தேரர் நடந்துகொண்ட விதம் குறித்த காணொளிகளை இந்த வாரம் முதல் எமது அமைச்சு அதிகாரபூர்வமாக வெளியிடுவதற்கு முடிவுசெய்துள்ளது.

ஒரு கட்டத்தில் "மகாநாயக்க தேரர்கள் முட்டாள்கள். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. சிங்கள மக்களை நானே பிரதிநிதித்துவம் செய்கின்றேன்" என ஞானசார தேரர் தெரிவித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ஞானசார தேரர் தற்போது இருப்பதை காணமுடிவதாக அமைச்சர் மனோகணேசன் கூறியுள்ளார்

இந்நிலையில், ஆளும் கட்சியை சேர்ந்த முதலமைச்சர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு "ஞானசார தேரரை கைது செய்யும்படி ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டாம் என ஞானசார தேரர் தரப்பில் உங்களை கேட்டுக்கொள்ள சொல்லியுள்ளார்கள்" என தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும், ஞானசார தேரரையோ அல்லது வேறு எந்த தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு தனக்கு நேரம் கிடையாது என பதில் வழங்கியிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.