பௌத்த காடையர்களினால் முஸ்லிம் பகுதி மீது துப்பாக்கிப்பிரயோகம், பெண்கள் பள்ளிவாசல்களில் தஞ்சம்
இன்று மாலை (16.05.2017) திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் செல்வ நகர் பிரதேசத்தில் அமைந்துள்ள பன்சலையில் பௌத்த மதகுரு தலைமையில் ஒன்றுகூடிய வெளி இடங்களில் இருந்து வந்த காடையர்களின் செயற்பாட்டினால் முஸ்லிம்கள் வாழும் செல்வ நகர் பகுதியில் பதற்ற நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
பன்சல பகுதியில் இருந்து முஸ்லிம் பிரதேசத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டுள்ளன. இது பற்றி அப்பகுதி மக்களால் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்களின் கவனத்திற்கு உடனடியாக கொண்டுவரப்பட்டதை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் இன்று வைபவம் ஒன்றில் கலந்துகொள்ள திருகோணமலை வந்திருந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன அவர்களை நேரடியாக சந்தித்து அவரின் நேரடிக்கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதோடு. அமைச்சர் ருவன் விஜயவர்த்தன அவர்களால் அங்கிருந்து மாவட்டத்தின் பொலிஸ்,முப்படைகளின் அதிகாரிகளுக்கு அப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உத்தரவிட்டார்.
மேலும் இது தொடர்பாக ஆளுநர்,அரசாங்க அதிபர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டதை அடுத்து இது சம்பந்தமான விசேட கூட்டமொன்று நாளை காலை 9.30 க்கு ஆளுனரின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்ற நிலை நிலவுவதாகவும் இதனால் அப்பகுதி பெண்கள் அல் ஹுதா பள்ளிவாயளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் மேலும் ஆண்கள் பொது இடங்களில் பாதுகாப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விடயங்களை அறிய பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தற்போது களத்திற்கு சென்றுள்ளார்
Post a Comment