"ஞானசாரர் கைதானால், என்ன நடக்கும் என்பது தெரியாது" - வெள்ளைத் துணியால் வாயைக் கட்டியபடி ஆர்ப்பாட்டம்
இனவாதம் பேசுவதாக ஞானசார தேரருக்கு எதிராக மாத்திரம் சட்டநடவடிக்கை எடுக்காமல் வடக்கு மற்றும் கிழக்கில் இனவாதம் பேசும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் எதிராக சட்டநவடடிக்கை எடுக்க கோரியும், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டால் நாட்டில் என்ன நடக்கும் என்பது தெரியாது என எச்சரிக்கை விடுத்து பொதுபலசேனா அமைப்பினர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு முன்பாக வெள்ளைத் துணியால் வாயைக் கட்டியவாறு இன்று -23- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வடக்கு மற்றும் கிழக்கில் இனவாதமாக செயற்படும், சி.வி. விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம், விஜயகலா மகேஸ்வரன், ரிசாத் பதியுதீன் , ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளே ஞானசார தேரருக்கு எதிராக எடுக்க வேண்டும் எனவும் பொதுபல சேனா அமைப்பினர் தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த தேரர் ஒருவர்,
ஞானசார தேரரை கைது செய்ய மறைமுகமான செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஞானசார தேரர் இனவாதமோ மதவாதமோ பேசவில்லை. அவர் தமது இனத்துக்கு எதிரான வேற்று இனத்தவரால் மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராகவே குரல்கொடுத்தார்.
ஆனால் ஞனசார தேரரை விட இன,மத வாதம் பேசிய தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஈழம் சார்பான தனிப்பட்ட அரசியலை மேற்கொள்கின்றார். விஜயகலா மகேஸ்வரன் இனவாதமே பேசிக்கொண்டிருக்கின்றார். அசாத்சாலி ஞானசார தேரரை அடித்துக் கொல்ல வேண்டும் என்கிறார். கிழக்கில் உள்ள இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்படும் என ஹிஸ்புல்லா கூறுகின்றார். விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை இனவாதத்தை தூண்டும் வகையில் சிவாஜிலிங்கம் கொண்டாடுகின்றார். காட்டையழித்து முஸ்லிம் குடியேற்றங்களை ரிசாத் பதியுதீன் ஏற்படுத்தி வருகின்றார்.
ஆனால் சிங்களவர்களாகிய நாங்கள் எதனையாவது கூறினால் இனவாதம் பேசுகின்றோம் என்கிறார்கள். எனவே இதற்கு பிறகு நாங்களை எதனையும் கூற மாட்டோம். அதற்காகவே வாயில் வெள்ளை துணியை கட்டியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றோம்.
சிங்களவர்களுக்கு எதிராக தமிழ், முஸ்லிம் இனவாதிகளால் முன்னெடுக்கப்படும் செய்பாடுகளுக்கு எதிராகவே ஞனசார தேரர் செயற்பட்டார். இதுதொடர்பில் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கும் தெரியும். ஆனால் இவற்றுக்கு அப்பால் புதிய பிரச்சினையை உருவாக்கி சிங்கள இனத்தை அழிக்க முயற்சி செய்கின்றார்கள்.
எனவே தமிழ் முஸ்லிம் இனவாகதிகளுக்கு எதிராகவும் ஒரு நீதியும் ஞானசார தேரருக்கு எதிராக ஒரு நீதியையும் நடைமுறைப்படுத்த வேண்டாம்.
நீதியை சரியான முறையில் நடைமுறைப்படுத்தாமல் ஞானசார தேரருக்கு எதிராக செயற்பட்டால் என்ன நடக்கும் என கூறமுடியாது. எமது இளைஞர்கள் அனைவரும் மிகவும் வருத்தமடைந்துள்ளனர் என்றார்.
They agreed that there are doing racist activities...
ReplyDeleteYA ALLAH IVARHALUKKU HIDAYATHTHAI NASEEBAKKUWAYAHA
ReplyDelete