இலங்கை பொலிஸாரின் மனிதாபிமானம், ஜேர்மன் தம்பதி நெகிழ்ச்சி
இலங்கை சென்ற ஜேர்மன் தம்பதி ஒன்று தவறவிடப்பட்ட பணப் பை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை விகாரைக்கு அருகில் விழுந்து கிடந்த பணப்பையை விசேட அதிரடி படை முகாமின் பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்டெடுத்துள்ளார்.
ஏ.ம்.லால் திஸாநாயக்க என்ற பொலிஸ் அதிகாரி பணப்பை கண்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கிகோலஸ் நொப்ஸ் மற்றும் அவரது மனைவி நேற்று மாலை தம்புள்ளை பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
அதில் தமது வங்கி கணக்கு அட்டை மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு பணத்துடனான பை எங்கோ விழுந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸ் தலைமையக பொலிஸ் அதிகாரிக்கு தொலைப்பேசி அழைப்பொன்று கிடைத்துள்ளது. அந்த அழைப்பில் பண பையை மீட்ட பொலிஸ் அதிகாரியே உரையாடியுள்ளார்.
தனக்கு பணத்துடனான பை ஒன்று கிடைத்ததமாகவும், உரிமையாளரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், அவர்களை கண்டுபிடித்து இதனை ஒப்படைத்து விடுமாறும் அவர் பொலிஸ் தலைமையக அதிகாரியிடம் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உரிமையாளர் தனது அருகில் இருப்பதாக கூறிய பொலிஸ் தலைமை அதிகாரி, பண பையை மீட்ட அதிகாரி நிற்கும் இடத்திற்கு ஜீப் வண்டி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
வெளிநாட்டவரின் 70000 ரூபாய் பணம் மற்றும் வெளிநாட்டு பணம் உள்ளதாக தகவல் கிடைத்தவுடன் ஜேர்மன் நாட்டவர் மகிழ்ச்சியடைந்துள்ளர்.
பொலிஸ் நிலையம் வந்த அதிகாரி, உரியவர்களிடம் பணப்பை ஒப்படைத்தார். இதற்கு ஜேர்மன் தம்பதி நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் ஜேர்மன் பிரஜை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, உலகளாவிய நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார்.
இலங்கை பொலிஸார் மட்டுமல்ல இலங்கை திருநாட்டின் சிங்கள தமிழ் முஸ்லிம் என அனைத்து மக்களும் குறுகிய லாபங்களுக்காக அரசியல்வாதிகளால் பிரித்து வைக்காத வரை ரொம்பவும் நல்லவர்களே!
ReplyDeleteவெள்ளயனிடம் அனுபவித்த சிறு கூட்டம் தழிழர்களிடம் ஹீரோவாக நியாயமற்ற 50/50 கோரிக்கை மூலம் மற்ற சமூகங்களிடம் அன்னியமானது.
அதே வெள்ளயனால் புறக்கணிக்கப்பட்ட சிங்கள சமூகம் முழுவதையும் உண்டு ஏப்பமிட வேண்டுமென்று மற்றய இரு சமூகத்திற்கும் அரசியலால் துரோகமிழைத்தது. இது 30 வருட யுத்தத்தின் மூலம் நிரந்தர பகையை ஏற்படுத்தியது மட்டுமன்றி யானைக் கூட்டத்தின் சண்டையில் மிதிபட்ட தகரப்பற்றையாக இடுப்பொடிந்து இரு சமூகங்களாலும் புறந்தள்ளப்பட்டு இன்று தனது இருப்பிற்கே உத்தரவாதமின்றி அனாதரவாய் .......அதிலும் முஸ்லிம் அரசியல்வாதிகளால் நடுரோட்டில் அம்மணமாய் நிற்கிறது.
இத்தனைக்கும் மத்தியிலும் தனிப்பட பழகிப்பாருங்கள் அத்தனை பேரும் நல்லவர்களே!