Header Ads



டுபாயின் அதிரடித் திட்டம்

ஐக்கிய அமீரகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் பொருட்டு அண்டார்டிகாவில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டத்தை 2019 ஆம் ஆண்டுக்குள் தொடங்க அந்த நாடு திட்டமிட்டுள்ளது.

உலக நாடுகள் பலவற்றின் வர்த்தக தலைநகராக விளங்கும் ஐக்கிய அமீரக நாடுகள் எண்ணெய் வளத்தில் செழித்து காணப்படுகின்றன.

இருப்பினும், அங்கு போதிய மழையின்றி மக்களிடையே குடிநீர் பிரச்சனை கடுமையாக நிலவி வருகிறது. செல்வ செழிப்புடன் காணப்பட்டாலும் ஐக்கிய அமீரகத்தில் மழை என்பதே அரிதான ஒன்றாகும். எனவே அங்கு கடல்நீரை குடிநீராக்கி தண்ணீர்ப் பிரச்சனையை சமாளித்து வருகின்றனர்.

தற்போது குடிநீர் பிரச்சனையை தீர்க்க பனிப்பாறைகளை வெட்டி எடுத்து அதனை தண்ணீராக்க, அரபு நாடுகள் திட்டமிட்டுள்ளன.

இதற்காக புஜைரா துறைமுகத்தில் சிறப்பு ஆலை நிறுவப்படுகிறது. அதாவது, அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகளை வெட்டி எடுத்து, கடல்மார்க்கமாக 9,200 கி.மீ கொண்டு வருகின்றனர். பின்னர் அதை தண்ணீராக்கி விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு சுமார் 500 மில்லியன் டொலர்கள் செலவிடப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2019-ம் ஆண்டுக்குள் தொடங்கப்பட உள்ளதாக அமீரக தேசிய ஆலோசகர் குழு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இத்திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என அதிகாரிகள் மட்டத்தில் இருந்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

No comments

Powered by Blogger.