'முஸ்லிம் ஒருவருக்கு மூத்திரம் போகாவிட்டாலும், ஆட்சியாளர்கள் கவலைப்படுகிறார்கள்' - ஞானசாரர்
முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஞானசாரர் இன்று -19- பொலிஸில் முறைப்பாடு செய்துவிட்டு தெரிவித்த விடயங்கள்,
''இது அரபு நாடு இல்லையென்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். எந்த ஆட்சி இந்த நாட்டில் வருகிறதோ அந்த ஆட்சியின் தயவைப் பெற்றுக் கொள்கிறார்கள். வில்பத்தில் காணி அபகரிப்பு மற்றும் போதை பொருள் விற்பனையாளர்களைப் பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அரபு நாடுகளிடம் பணத்தைப் பெற்றுத் தனியான ஆட்சி நடத்துகிறார்கள். சதொச நிறுவனங்களை அதிகமாக முஸ்லிம்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். மன்னார் வில்பத்துவில்
'முஸ்லிம் ஒருவருக்கு மூத்திரம் போகாவிட்டாலும், ஆட்சியாளர்கள் கவலைப்படுகிறார்கள்'
இஸ்லாமிய அடிப்படைவாதிகளை மறைத்து வைத்து இந்தியாவைத் தாக்கும் சூழ்நிலைகளை உருவாக்கி வருகிறார்கள். கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிம் பிராந்தியத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்......'' என்று மிக நீண்ட குற்றப் பட்டியலை வாசித்த ஞானசார, ''சிங்களவர்களுக்குப் பிரச்சினையென்றால் நீதி கிடைப்பதில்லை; ஆனால், முஸ்லிம் ஒருவருக்கு மூத்திரம் போகாவிட்டாலும் அதனைப் பற்றி ஆட்சியாளர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள்!'' என்றும் கூறினார்.
நேற்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளின் புகாரின் பேரில் தான் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் அவசர அவசரமாக இன்று தானே போய் புகார் செய்துவிட்டு வந்திருக்கிறார் ஞானசாரர் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
எஸ். ஹமீத்.
சமீப காலமாக இந்தியா, மோடியென்று இவன் அதிகமாக பேசும்போது புரிகின்றது இந்த பன்றி யாருடைய எலும்பு துண்டுகளுக்காக துடிக்கின்றானென்று
ReplyDelete