Header Ads



சிலாவத்துறை கடற்படை முகாமை, அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்


சிலாவத்துறை கடற்படை முகாமிற்கு முன்னால் சிலாவத்துறை பிரதேச மக்கள் மற்றும் வர்த்தக சங்க உரிமையாளர்கள் மற்றும் காணி மீட்பு குழுவினர் ஒன்றாக சேர்ந்து சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்ற கோரியும்,சிலாவத்துறை காணியினை நிள அளவை செய்வதையும் நிறுத்த கோரி   ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று காலை மேற்கொண்டதாக சிலாவத்துறை மீட்பு குழுவின் தலைவரும்,பள்ளிவாசல் உறுப்பினருமான ஏ.அன்சார் தெரிவித்தார். 

மேலும் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

சிலாவத்துறை கடற்படை முகாம் அமைந்துள்ள காணி எங்களுடைய பாரம்பரிய காணியாக இருந்து வந்து வேலை இலங்கை அரசாங்கத்தின் கடற்படையினர் அத்துமீரி முகாமை அமைத்து இருந்து வருகின்றார்.
இதில் தமிழ் மக்களின் காணி கூட இருக்கின்றது. அதனை கூட பெறமுடியாத நிலையில் அப்பாவி தமிழ் மக்கள் இருந்து வருகின்றார்கள்.

சிலாவத்துறை கடற்படை முகாமை நில அளவை செய்ய முசலி பிரதேச காணி கிளையினர் மற்றும் நில அளவை அதிகாரிகள் வருகை தந்தார்கள் எனவும் தெரிவித்தார்.

இந்த காணியினை நில அளவை செய்து இலங்கை அரசாங்கம் சொந்தமாக்கி கொள்ள உள்ளதாகவும்,நாங்கள் அறிந்து அதனை தடுக்கும் முகமாகவே! ஆர்ப்பாட்டம் செய்தோம் எனவும், இது தொடர்பில் பல முஸ்லிம்,தமிழ் அரசியல்வாதிகளிடம் கோரிக்கையினை வழங்கிய போதும் எங்கள் பிரச்சினை தொடர்பில் இதுவரைக்கும் உரிய தீர்வினை பெற்று தரவில்லை எனவும் விசனம் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.