Header Ads



இஸ்லாத்தை நிந்தித்த பிக்குவுக்கு பதிலடி, திரண்டுவந்து காடையர்கள் வன்முறை

கடுகண்ணாவை தந்துரை முஸ்லிம் கிராமத்தில் இன்று முன்னிரவில் பொதுமக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கண்டி, கடுகண்ணாவை மற்றும் பிலிமத்தலாவை நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள தந்துரை முற்றுமுழுதான ஒரு சிறு முஸ்லிம் கிராமமாகும். இங்குள்ள இளைஞர் ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு எதிரான புத்த பிக்கு ஒருவரின் பேஸ்புக் பதிவில் சூடான வார்த்தைப் பிரயோகங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார்.

இதனையடுத்து இன்று முன்னிரவில் நோன்பு திறக்கும் நேரம் ஏராளமான இனம்தெரியாத நபர்கள் தந்துரை முஸ்லிம் கிராமத்திற்குள் புகுந்து கண்ணில் எதிர்ப்பட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வீடுகளுக்கும் கல்லெறித் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பான தகவல் அறிந்தவுடன் அமைச்சர் ஹலீம் உடனடியாக மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய பணிப்புரையின்பேரில் அப்பிரதேசத்துக்கு பொலிசார் அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன் பிரதேசத்தின் புத்த விகாரைக்கு நேரடியாக சென்ற முஸ்லிம் குழுவொன்று தமது கிராம இளைஞனின் செய்கைக்கு மனவருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டதன் பின்னர் இனவாதிகள் சற்று ஆத்திரம் தணிந்து, கடுமையான எச்சரிக்கையுடன் அப்பிரதேசத்தை விட்டும் அகன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

8 comments:

  1. பிற மதத்தை தூற்றுபவன் முஸ்லிமாக இருக்க முடியாது ஏனெனில் அவன் இறை கட்டளையான "பிற மத கடவுள்களை தூற்றாதீர்" என்பைதை மறுக்கிறான்.
    இறை கட்டளையை மறுப்பவன் முஸ்லீமா?

    ReplyDelete
  2. முகநூலில் நினைத்ததை எல்லாம் எழுதிக்கொண்டிருக்கும் இந்த வலுக்கல்களுக்கு தெரியுமா இவ்வாறான பொறுப்பற்ற முகநூல்பதிவுகால் ஏற்படும் பிரச்சினைகள்,இன்று நாட்டில் இருக்கின்ற பிரச்சினைகளுக்கு காரணம் இவ்வாறான செயல்பாடுகளும் ஒருவித காரணமே,அண்மையில் வெள்ளைப்பட்டி அணிந்து கொண்டு பொதுபலசெனா நடாத்திய ஆர்ப்பாட்டம்,நேரடியாக முகநூலில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த வேளை இஸ்லாமிய பெயர்கொண்ட பலர் அவர்களை வேண்டத்தாகாத சொற்களால் தூற்றி,தூசிக்கின்றார்கள்,அதற்கு பின்வரும் பௌத்தர்கள் அவர்களுக்கு ஏசுகின்றார்கள்,சண்டை அங்கேயே தொடக்கி விட்டது.மனித உரிமை சுதந்திரமேன்பன போன்ற விடையங்கள் எழுத்தில் மட்டுமிருக்கின்ற எமது நாட்டில் நாம் பவ்வியமாகவே நாந்து கோல வேண்டும்.

    ReplyDelete
  3. During this adverse situation, we should be vigilant and patient. This boy has to be warned and advised how he has to behave during this unfavourable situation. I think he may be a member of SLTJ.

    ReplyDelete
  4. The wordings of the article portray the lad who had commented on the FB
    as Hero. I feel the editor has to be little more careful.

    ReplyDelete
  5. இவ்வாறான பிரச்னைகள் வராமல் பாதுகாப்பத்துகொள்ளத்தான் எங்களது சமூக தலைவர்கள்,ஜம்மியத்துல் உலமா, சூராசபை மற்றும் எங்களது அரசியல்வாதிகள் தொண்டை கிளியக்கிளிய சொல்லுவது கொஞ்சம் நிதானம்,பொறுமையை கடைபிடிக்கச்சொல்லி.ஒருசிலரின் அவசரபுத்தியால் கிராம,மாவட்டமென்று முழுநாட்டு பிரச்னையாக மாத்துவத்துக்கு சந்தர்ப்பம் காத்துகொண்டிரிருக்கிறார்கள் நமது இனவெறியர்கள். ஒருசிலவிஷயங்களை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியாவிட்டால் பக்கத்திலுள்ள பொலிஸில், முறையிடுங்கள், மேலும் எங்களது பகுதிக்கு பொறுப்பான அரசியல்வாதிகளிடம் தெரியப்படுத்துங்கள்.
    அதைவிட்டு கம்பெடுத்தவனல்லாம் வேட்டைக்காரனாக மாறாமல் கொஞ்சம் நிதானத்தை கடைபிடிப்பதுதான் இப்போதைக்குள்ள நிலைமை. எத்தனையோ வன்முறைகளில்,அல்லாஹ்வை இழிவுபடுத்தியனை இன்னுமே ஒன்றும்செய்யமுடியால் இருக்கும்போது அவனால் நாடே பத்திக்கிட்டு எரியும் நிலைமையில் இருக்கும்போது நாங்கள் கொஞ்சம் நிதானத்தை கடைபிடிப்பதுதான் சாலச்சிறந்தது.

    ReplyDelete
  6. Thewai illadha welai idhu. Ippadi perumpanmaya walum giramathil sirupanmaya muslimgal wala wenduma

    ReplyDelete
  7. என்கயொ இருந்து வந்து ஊருக்குல் புகுந்து அடிப்பது என்ரால் அந்த் எல்லாம் பென்கலா

    அவர்கல் செஇயும் பிலைகு நாம் மன்நிப்பு கெப்பதா என்ன உலகம்டா

    குட்டும் இடதில் கத்தி வைக்கும் வரை குட்டி கொண்டெ இருகப்பார்கல்

    ReplyDelete

Powered by Blogger.