Header Ads



குரோதத்தை தூண்டுவோருக்கு எதிராக, நடவடிக்கை எடு - ஐ.நா.

குரோத உணர்வைத் தூண்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. குரோத உணர்வைத் தூண்டும் வகையில் செயற்படுவோர், வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிடப் பிரதிநிதி உனா மக்குலே (Una McCauley)  இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கடந்த வாரம் சர்வதேச வெசாக் தினம் இலங்கையில் கொண்டாட்டப்பட்டதாகவும் இந்த வாரம் புத்தரின் கொள்கைகள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாகவும்  சுட்டிக்காட்டியுள்ள அவர் குரோதத்தை விதைப்போருக்கு எதிராக அரசாங்கமும் நாட்டு மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென கோரியுள்ளார். அண்மையில் முஸ்லிம் மதவழிபாட்டுத் தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முஸ்லிம் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை சந்தித்து தங்களது பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

1 comment:

  1. ஏன் எதிர்க்கட்சி தலைவருக்கு வில்லகுதில்லியமா? அந்நிய நாட்டவர்களுக்கு விளங்கும்போது ஏன் எங்களது சம்பந்தன் ஐயாவுக்கு விளங்குதில்லை. ஏன் நாங்கள் முஸ்லிமன்ரா?

    ReplyDelete

Powered by Blogger.