இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலவரம், றீட்டா ஐசக்கிடம் முறைப்பாடு
ஐக்கிய நாடுகள் சபையின், சிறுபான்மை விவகார பணிப்பாளர் றீட்டா ஐசக்கிடம் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் இன்று, 18 ஆம் திகதி முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம்கள் சார்பில், சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பின் (JMC - I) தலைவர் அனீஸ் ரவுப் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
அண்மைய நாட்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத நடவடிக்கைள், வெறுப்புப் பேச்சுக்கள், பள்ளீவாசல்கள் மீதான தாக்குதல்கள் பற்றி அதில் விபரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் தரப்புகள் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனவாதச் செயற்பாட்டை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை விவகார பணிப்பாளர் றீட்டா ஐசக் இதுதொடர்பில் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நோன்பு காலம் விரைவில் ஆரம்பமகவுள்ள நிலையில், இந்த இனவாதச் செயற்பாடுகள் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டு முஸ்லிம்கள் தமது சயயக் கடமையை சுதந்திரமாக செய்ய வழிவகை செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment