திருடர்களை பிடிக்க அதிகாரத்தை தாருங்கள் என மைத்திரி - ரணில் வாக்கு கேட்டால், மக்கள் சாட்டை அடிப்பது நிச்சயம்
ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்த ஸ்தாபிக்க போவதாக கூறிய விசேட நீதிமன்றத்தை உடனடியாக ஸ்தாபிக்குமாறு ஊழல் எதிர்ப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
விசேட நீதிமன்றத்தை ஸ்தாபித்து பெரியளவில் ஊழல், மோசடிகளை செய்தவர்கள், அரச பணத்தை கொள்ளையிட்டவர்களை தண்டிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை வலியுறுத்துவதாக முன்னணியின் ஆலோசகர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள ஊழல் எதிர்ப்பு முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் முதலில் பாரிய ஊழல், மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் லெசில் டி சில்வாவை நீக்கியது.
தற்போது அந்த ஆணைக்குழு பெயர் பலகைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் திக்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க பதவியை ராஜினாமா செய்தார்.
விக்ரமசிங்க பதவி விலகிய பின்னர், இலஞ்ச ஆணைக்குழு, மகிந்த ராஜபக்ச காலத்தில் இருந்து பெயர் பலகை ஆணைக்குழுவாக மாறியது.
பாரிய ஊழல், மோசடிகளை விசாரிக்கும் செயலகத்திற்கு வழங்கும் வசதிகள் குறைக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த தேர்தலில் திருடர்களை பிடிக்க அதிகாரத்தை தாருங்கள் என்று கோரி மக்களிடம் வாக்கு கேட்டால், நல்லாட்சி அரசாங்கத்தின் மைத்திரி குழுவிற்கும் ரணில் குழுவிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் என மூன்று தரப்பினருக்கும் மக்கள் சாட்டையில் அடிப்பது நிச்சயம் என தென்னக்கோன் கூறியுள்ளார்.
Post a Comment