பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களை, கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம்
முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள், அவர்களது வர்த்தக நிலையங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களும், தீ வைப்புச் சம்பவங்களும் இடம்பெற்று வரும் நிலையில் அவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட திட்டத்தை அமுல் செய்ய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தங்களின் பொலிஸ் பிரிவில் இடம்பெறும் இவ்வாறான வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் இன ரீதியிலான செயற்பாடுகள் தொடர்பில் பொறுப்புக் கூறும் விதமாக இந்த திட்டத்தை அமுல் செய்ய சாகல ரத்நாயக்கவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி உடனடியாக குறித்த விடயம் அமுல் செய்யப்படவுள்ளது. இதனை விட சட்டத்தை கையிலெடுத்து செயற்படும் அனைத்து தனி நபர்களுக்கும் எதிராக பாராபட்சமின்றி கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சாகலவுக்கு உத்தரவிட்டார்.
ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் போதே இந்த உத்தரவுகளை அமுல் செய்ய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை இனவாத மதவாத செயற்பாடுகள், வழிபாட்டு நிலையங்கள் மீதான செயற்பாடுகளை கட்டுப்படுத்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஊடாக பொலிஸாருக்கு விஷேட ஆலோசனைகளும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
So no punishment for what ever happened.. No investigation, No arrest of the racist monk even after open evidence of his hate speech and actions ?
ReplyDeleteThanks to God who help us first and then to any world institution/s who forced our President and Prim minister to act, who were sleeping all these days and showed a blind eye on the racist monk and his group.
He should resign his duty or President should kickout him.
ReplyDeleteITHUKU IPPADITHAN SINHALA BASALA SOLLAWANUM ***BAMBUWA***
ReplyDeleteMuslim Economic expansion is the clear target !
ReplyDelete