ஞானசாரர் இன்று, கைது செய்யப்படுவாரா..?
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு வாரங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான 19 இனவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. நேற்று அதிகாலை குருணாகலவில் பள்ளிவாசல் ஒன்றின் மீதும் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
கடந்தவாரம் அமைச்சர் மனோ கணேசனின் செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஞானசார தேரர், அமைச்சருக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தார். இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் ஞானசார தேரரை நேற்றுமுன்தினம் இரவு குருநாகலவில் கைது செய்வதற்கு சிறிலங்கா காவல்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். எனினும் பிடியாணை இல்லாததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் நேற்றுமாலை கண்டி தலதா மாளிகையின் முன்பாக போராட்டம் ஒன்றில் இறங்கிய ஞானசார தேரர், அஸ்கிரிய பீடாதிபதியின் கோரிக்கையை அடுத்து அதனைக் கைவிட்டார்.
இந்த நிலையில் இன்று ஞானசார தேரர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment