மீண்டும் பூதங்கள், ஆட்சியாளர்கள் அச்சமா..?
“கிழக்கு மாகாண ஆட்சியின் பங்குதாரர்கள் என்ற அந்தஸ்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் நிரந்தர அந்தஸ்தாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் நாங்கள். அதன்மூலமே, நாங்கள் பல விடயங்களைச் சாதிக்க முடியும்” என, மு.காவின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், பிழைப்புவாத அரசியலையோ அல்லது சந்தர்ப்பவாத அரசியலையோ செய்யவில்லை என்றும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஆரையம்பதி, காங்கேயனோடை பிரதேச சிறுவர் பூங்கா மற்றும் முனிச் வீதி, புளியந்தீவு வீதி, டச்பார் வீதி, கல்லடி வேலூர் மற்றும் திசவீரசிங்கம் வீதிகளைத் திறந்துவைக்கும் நிகழ்வுகள், அமைச்சர் ஹக்கீம் தலைமையில்,இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றன. இவற்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
“வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள், தமிழ் பேசும் சமூகங்கள் என்ற அடிப்படையில், அரசியல் ரீதியாக ஒன்றித்துப் பயணிக்க வேண்டிய அவசியம், மிகத் தெளிவாக உணரப்பட்ட காலத்தில் நாங்கள் வாழ்கின்றோம். “கடந்தகால பூதங்கள், மீண்டும் கிளம்புகின்ற இக்காலத்தில், சட்டம், ஒழுங்கு விடயத்தில் தீவிர சக்திகளுக்கு ஆட்சியாளர்கள் அச்சம் கொள்கின்றார்களா என்று கேட்கத் தோன்றும் அளவுக்கு, சில சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. இந்தச் சூழலில், நாங்கள் இன்னும் இறுக்கமாக ஒன்றுபடவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். “இதேவேளை, அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் பிரதியமைச்சர் அமீர் அலி ஆகிய இருவரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினூடாக அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு, மு.காவுக்கு துரோகமிழைத்துவிட்டுச் சென்றனர். “இதற்காக அவர்கள் சொன்ன காரணமெல்லாம், அபிவிருத்திக்காக நாங்கள் அரசாங்கத்துடன் நிற்கவேண்டும் என்பதாகும். அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் ஆகிய இருவரும், மஹிந்த ராஜபக்ஷ தோற்கும் இறுதிவரை அவருடன் இருந்துகொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவைத் தோற்கடிப்பதற்கான சகல முயற்சிகளிலும் ஈடுபட்டனர். இப்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடன் தொங்கிக்கொண்டு நிற்கின்றனர்” எனக் குற்றஞ்சாட்டினார்.
Your aim is just to occupy the chief minister post permanently without taking any meaning full steps to solve ongoing racist aggression in the east.
ReplyDeleteDid you ever think that how was the provincial system obtained, how much sacrifices were made and how many lives were lost to have this? if you have ever thought about these, you might have worked to fulfill the duties obtaining the entitled powers which are still not given to the provincial system, specially, to North-East, such as rights over land and the police.
At least, do you know that if authorities over police and land are with provincial council, it will be possible to face the ongoing aggression legally by law in the east without allowing the common people to take the matter in their hands?
It sounds like you people want to keep all issues unresolved so that you can have a big shopping list to talk about in the election time. Otherwise, when eastern province is with you with the support of TNA, and north is in the hand of TNA, both parties might have had put effort to obtain the mentioned authorities at least by going to supreme court as these authorities are supposed to be given to provincial system as per the Indian Peace Accord
All your move shows that your people don't have any goal which is set to solve the political issues of people, but you are all running your personal business with politics, therefore, the strategies are made based on the expected profit for your people like you have mentioned in this article. Make no mistake, people will not always buy your election shopping list, they will look for new ways to overcome their problem which all have become daily events nowadays.
லூசித் தலைவா நீ யாருடன் ஒட்டி உறவாடினாய். அதே சால்வையில் ஊஞ்சலாடிவிட்டு இப்ப ரனிலின் தொட்டிலுக்குள் வாயில் சூதர் வைத்துப் படுத்துறங்கும் உமக்கு தற்போதைய நிலவரங்கள் பற்றி வாய் திறக்காது மற்றவனின் சோற்றில் மாங்காய் போடுகிறார்.
ReplyDeleteமானங்கெட்ட தலைவா ! கிழக்கு மாகாணத்தான் இருக்கும் வரை நீ ராசாதான். ஆனால் மேலே ஒருவன் உள்ளான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஏனுங்க உங்கட கருத்தை தமிழ் லில் விலாவாரியா கொடுத்தா எங்களை போல இங்குலிஷ் தெரியாத மக்களுக்கும் நல்லா விளங்கும் இல்லையா. இனியாவது செய்வீர்களா.
ReplyDeleteகிழக்கில் ஆட்சியை அமைத்து முஸ்லிம் காங்கிரசு எதனை சாதித்துள்ளது?
ReplyDeleteஒரு துண்டு நிலத்தை மீட்டுள்ளதா? நிருவாகத் தீவிரவாதத்தைக் களைந்துள்ளதா? யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளதா? மக்களை வாழ்வாதார ரீதியாக முன்னேற்றியுள்ளதா? வேலையற்ற இளைஞர்களின் கதி நிலைக்கு தீர்வு வழங்கியுள்ளதா?
ஆனால் ரீஎன்ஏ உடன் தேனிலவு கொண்டாடியுள்ளது.