கருப்புப்பட்டி அணிந்தபடி, மாகாண சபையில் உரையாற்றிய லாபிர் ஹாஜி
(JM.Hafeez)
மத்திய மாகாண சபை அங்கத்தவர் ஜெய்னுல் ஆப்தீன் லாபிர் (23.5.2017) மத்திய மாகாண சபை அமர்விற்கு கருப்புப்பட்டி அணிந்து சமுகமளித்திருந்தார். இது தொடர்பாக அவர் சபையில் உரையாற்றும் போது தெரிவித்ததாவது,
நாட்டை இன வாதத்திற்கு கொண்டு செல்லும் ஒரு சூழ்ச்சி நடை பெறுகிறது. அதற்கு நாம் பலிக்கடாவாக முடியாது. அரசியல் செய்வதாயின் அரசியல் விதி முறைகளின்படி அணுக வேண்டும். அதனை விட்டு விட்டு பிழையான அணுகு முறைகளைக் கொண்டுவரக் கூடாது. அண்மைகாலச் சம்பவங்கள் நிதரிசனமாக அதனை எடுத்துக்காட்டுகின்றன. ஒரு சிறிய குழு ஒரு சில இளைஞர்களையும் மதகுருக்களையும் அழைத்துக் கொண்டு வீராப்புப் பேசித் திரிகின்றனர். பேசினால் மட்டும் பரவாயில்லை. கடந்த சில நாட்களாக பள்ளிகள் தாக்கபடுவதாக அறிகிறோம். மனிதனை மனிதனாக வாழ வழிகாட்டுவது சமயங்கள். சமயங்களுக்கு வழிபாட்டு முறைகள் உண்டு. அவ்வாறு வழிபட வணக்கஸ்தலங்கள் உண்டு. அவை பள்ளியாக இருக்கலாம். கொவில்களாகவும் இரு;ககலாம் வேறு ஒன்றாகவும் இருக்கலாம்.
ஆனால் மத வழிபாட்டிடங்களில் கைவைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பியதாக வரலாறுகள் இல்லை. எனவே மத நிந்தனை அல்லது வழிபாட்டு ஸ்தலங்களில் தாக்குதல் நடத்துவதை நாரீக சமூகம் ஏற்றுக் கொள்ளாது. ஆண்மையில் சில பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதற்கு எனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில்தான் நான் இன்று கருப்பட்டி அணிந்து வந்துள்ளேன் என்றார்.
தோடர்ந்து அவர் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது-
எனக்கு தமிழ், முஸ்லிம், சிங்கள இனங்களைச் சேர்ந்த முத்தரப்பினரும் வாக்களித்தள்ளனர். என்னால் எனக்கு வாக்களித்த மக்களை ஏமாற்ற முடியாது. நான் பிரதி நிதித்துவப் படுத்துவது இன சாயம் பூசிய கட்சியல்ல. ஐக்கிய தேசியக் கட்சியாகும். எனவே எம்மில் ஐக்கயம் உண்டு. நாம் சகலரையும் அரவனைத்துச் செல்லும் ஒரு கட்சி. எனவே இனவாதம் மதவாதம் பேசும் சகல செயற்பாடுகளையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பௌத்தர்கள் மதிக்கும் மகாநாயக்கத் தேரரை குறை கூறிக்கொண்டு அவர் முன்னிலையில் வந்து ஒரு இனத்தை அழிப்பேன், பள்ளிகளை உடைப்பேன் என ஒருவரால் எப்படி சவால் விட முடியும். இவ்வாறான செயற்பாடுகளை கண்டும் காணானது போல் இருக்க முடியாது. மாகாண சபை உன்ற வகையில் இப்படியான விடயங்களுக்கு ஒரு தீர்வு பெறப்பட வேண்டும எனக் கேட்கிறேன்.
இவ்வாறான பிரச்சினைகள் ஆரம்பத்திலே கலையப்பட வேண்டும். தலை தூக்க அனுமதிக்கக் கூடாது. பின்னர் பிரச்சினைகள் பூதாகரமாகிய பின் யோசிப்பதில் பயன் இல்லை. மத்திய மாகாணத்தில் அமைதியை நிலை நாட்டும் பொறுப்பு முதலமைச்சரக்கு உண்டு. எனவே அவர் அதனை சரியாகச் செய்வார் என எதிர் பார்க்கிறேன் என்று குறிப்பி;டார்.
Post a Comment