அடைமழை தொடர்ந்தால், பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழையினால் நாட்டின் சில இடங்களில் அனர்த்தங்கள் ஏற்படலாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது
காலி, மாத்தறை மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் நேற்று இரவு கடும் மழை பெய்துள்ளது.
ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையின் காரணமாக பத்தேகம, தவலம, நாகொட மற்றும் வெலிவிட்டிய உட்பட கீழ் மட்ட பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
காலி மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்காத பிரதேசங்கள் உட்பட பல பகுதிகள் தற்போது நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் மணித்தியாலங்களில் அடைமழை பெய்தால் களனி கங்கைக்கு அருகில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன துறை திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக களனி கங்கைக்கு இரண்டு பக்கத்திலும் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி இயக்குனர் பிரதிப் கொடிபிலி குறிப்பிட்டுள்ளார்.
களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் அதனை சுற்றியுள்ள கீழ் மட்ட பகுதி மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் இரண்டாம் திகதி வரை நாடு பருவபெயர்ச்சி மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment