எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ள, படையினர் தயாராக இருக்க வேண்டும்
எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்வதற்கு ஏற்றவகையில் படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் அரசாங்கத்தினால், ஆண்டு தோறும் நடத்தப்படும் போர் வீரர்களை நாளை முன்னிட்டு நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
“இந்தியப் படையினரால் கூட விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாதிருந்தது. அவர்கள் அந்த முயற்சியில் வெற்றிபெறாமல் நாடு திரும்ப நேரிட்டது.
ஆனால் உள்நாட்டுப் படையினர் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்தனர்.
எத்தகைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அவசர நிலைகளை எதிர்கொள்வதற்கும் ஏற்ற வகையில் படையினர் தயாராக இருக்க வேண்டும்.
படையினரின் தேவைகளை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment