Header Ads



உதவிகளை வழங்கச்சென்ற ஹெலி விழுந்தது - விமானிக்கு ஜனாதிபதி பாராட்டு


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக சென்ற விமானப்படையினரின் ஹெலிகொப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானியின் கட்டுப்பாட்டை இழந்த குறித்த எம்-17 ஹெலிகொப்டர் காலி - பெத்தேகம பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் குறித்த விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லைனெவும், ஹெலிகொப்டர் முற்றாக சேதடைந்துள்ளதாகவும் விமானப்படை பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தியின் விமானியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கலந்துரையாடியுள்ளார் இருப்பினும்,பயணித்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவே,குறித்த விமானியின் தைரியத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இவ்விபத்து இடம்பெற்ற போது, மாலுமி அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் உள்ளிட்ட 10 பேர், அதில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.



1 comment:

  1. these airforce is evem cannot do rescue ooeration.....poor country with rotton brains.

    look at the helicopter, 30 or 40 years old with painted in three wheel painting shop.
    this is airforce aircraft?????

    ReplyDelete

Powered by Blogger.