சீக்கியர்களும் - ஹிந்துக்களும் சேர்ந்து கட்டிக்கொடுத்த பள்ளிவாசல்
சீக்கியர்களும் - ஹிந்துக்களும் சேர்ந்து முஸ்லிம்களுக்காக
கட்டிக்கொடுத்த பள்ளிவாசல்..!
திறப்பு விழா நிகழ்ந்த நாள்:
25-05-2017
ஊர்: லூதியானா அருகில் உள்ள 'காலிப் ரான் சிங்வால்'
பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பள்ளிவாசல் இல்லாததால் அடுத்த ஊருக்கு சென்று தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களுக்காக.. உள்ளூரிலேயே, தங்கள் சொந்த செலவில் ஒரு பள்ளிவாசலை கட்டி அதற்கு திறப்பு விழாவையும் நடத்தி வைத்துள்ளனர், சீக்கியர்களும், ஹிந்துக்களும்.
சீக்கியர்களும் ஹிந்துக்களும் பெரும்பான்மையாக வசிக்கும் இக்கிராமத்தில், முதன்முதலில் கடந்த 1998-ல் ஒரு முஸ்லிம் குடும்பம் குடியேறியுள்ளது.
தற்போது 150 முஸ்லிம்கள் வாழ்ந்துவரும் நிலையிலும் தொழுகைக்காக என்று ஒரு இடம் இல்லாமல் பக்கத்து ஊருக்கு சென்று வந்தவேளையில் ரமலானுக்கு சமீபமாக பள்ளிவாசல் உருவாகியுள்ளது, குறிப்பிடத்தக்கது.
masha allah
ReplyDeleteAllahu akbar, this is by allah.
ReplyDeleteReligious tolerance..
ReplyDeleteWhy not MODI has not got this ?
masha allah
ReplyDelete