தீவிரவாதத்தை ஆதரிப்பதை ஈரான், நிறுத்த வேண்டும் - டிரம்ப் எச்சரிக்கை
சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என ஈரான் நாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து முதன் முதலாக வெளிநாட்டு பயணமாக டிரம்ப் சவுதி அரேபியா பயணமானார்.
சவுதியில் நேற்று பயணத்தை முடித்துக்கொண்ட டிரம்ப் இரண்டு நாள் பயணமாக தற்போது இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதியான Reuven Rivlin என்பவரை சந்தித்து டிரம்ப் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார்.
அப்போது, தீவிரவாதத்தை அழிக்க இஸ்லாமிய நாடுகள் முன் வந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஈரான் நாட்டின் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
எந்த சூழ்நிலையிலும் தீவிரவாதிகளுக்கும் கிளிர்ச்சியாளர்களுக்கும் ஈரான் ஆதரவு அளிக்க கூடாது.
சிரியா ஜனாதிபதிக்கு ஆதரவு அளிப்பது, ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிப்பது மற்றும் லெபனான் நாட்டில் சட்டவிரோதமாக இயங்கி வரும் Hezbollah Shia கட்சிக்கு ஈரான் ஆதரவு அளிப்பதால் மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் ஆபத்தில் தத்தளித்து வருகின்றன.
ஈரான் நாடு தீவிரவாதத்திற்கு ஆதரவு தருவதை நிறுத்திக்கொள்வதுடன் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ளும் கூடாது.
இதனை அமெரிக்கா-இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
100% agreed.
ReplyDeleteபாக்கிஸ்தானும் தான்.
இந்தியாவும்தான்! அத்தோடு அத்தோடு terrorist organizations பட்டியலில் முதலிடத்தை வகித்த LTTE , அப்பாவி இந்து தமிழ் பச்சிலம் பாலகர்களை வைத்து முதல் தற்கொலைதாரிகளாக உலகுக்கு அறிமுகப்படுத்திய அந்த terrorist பிரபாகரனை வீடுகளில் photo வைத்து வணங்கி ஐரோப்பா/ கனடாவில் பஞ்சம்பிழைப்பவர்களுக்கும் அந்தந்த அரசுகள் ஆதரிப்பதை நிறுத்த அவர்களை திருப்பி இலங்கைக்கே அனுப்பவேண்டும்.
ReplyDelete@Voice SL,
DeleteISIS முஸ்ஸிம் பயங்கரவாதிகளின் உங்களை போன்ற ஆதரவாளர்களை என்ன செய்வதாம்?