Header Ads



வெகுவிரைவில் இந்த அரசை, வீட்டுக்கு அனுப்புவோம் - நாமல் ராஜபக்ச

மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் இந்த அரசை வெகுவிரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சி அமையும் நாள் விரைவில் வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

"மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தேசிய அரசுக்கு அக்கறையில்லை. முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பைக் குறைப்பதன் மூலம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியாது.

மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி ஆட்சி செய்யப் பார்க்கின்றனர். நாட்டில் உள்ள அனைத்துத் தொழில்துறையினரும் இன்று வீதியில் உள்ளனர்.

இராணுவத்தினர், பிக்குகள், பல்கலைக்கழக மாணவர்கள் என்று அனைவர் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர். நாட்டின் சட்டம், ஒழுங்கு தொடர்பில் பேசும் அமைச்சர்களின் செயற்பாட்டைப் பார்த்தால் மக்களுக்கு நன்கு தெரியும்.

மக்களின் ஜனநாயக உரிமையான உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தப் பயப்படுகின்றனர். இவர்கள் 2020 வரை ஒருபோதும் தேர்தலை நடத்தப் போவதில்லை.

இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு விரைவில் அமையும்.

அதற்கு மக்கள் முழுமையாக அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். அதன் காரணமாக இந்த அரசு தேர்தலை நடத்தப் பயப்படுகின்றது.

விரைவில் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு அமையும். அதனை அவர்களால் தடுக்க முடியாது" என மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:


  1. This is the TRUTH, Insha Allah. The change is happening. Even Muslim UNP MP's are now scared of defeat of themselves and the UNP in any forth-coming elections.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    மஹிந்த கூட்டத்தில் திரண்ட மக்கள்! நல்லாட்சியில் ஏற்பட்ட மாற்றம்.

    மஹிந்த அணியின் மே தினக் கூட்டத்துக்கு கிடைத்த வெற்றியால் மைத்திரி - ரணில் விக்கிரமசிங்க அரசு அதிர்ச்சி அடைந்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
    மே தினத்தின் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது பிரதிபலித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
    இதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றக் கூட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூட்டியுள்ளார்.
    இந்த கூட்டத்தில் மஹிந்த அணியினரின் மே தினப் பேரணி குறித்து நீண்டநேரம் விவாதம் இடம்பெற்றுள்ளது.
    பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா, கட்சி உரிய விதத்தில் தயாராக இருக்கவில்லை. அபிவிருத்தி நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை.
    தொகுதி மக்களுக்கு எந்த வேலை வாய்ப்புகளையும் கட்சி வழங்கவில்லை. உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் மே தினக் கூட்டத்துக்கு மேலும் மக்களை கொண்டுவந்திருக்க முடியும்' என்று தெரிவித்துள்ளார்.
    ஐக்கிய தேசியக் கட்சிக்கு என ஊடகப்பிரிவு ஒன்று உள்ளதா என சந்தேகம் வெளியிட்டுள்ள அவர், அது மோசமாக செயற்பட்டது என்றும் சாடியுள்ளார்.
    ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி குறித்து சிறந்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் நாங்கள் தோல்வியை தழுவ தயாராக இருக்க வேண்டும்.
    ராஜபக்ஷவின் மீள் வருகை இடம்பெற்றால் மிக மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
    இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், "நாங்கள் தேர்தலில் தோற்பதற்கு அச்சமடைந்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
    இதற்கு சீற்றத்துடன் பதிலளித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, "நீங்கள் அச்சமடைந்தால் நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை. நீங்கள் போகலாம்'' என்றும் தெரிவித்துள்ளார்.
    மஹிந்த ராஜபக்ஷவின் மே தினப் பேரணியில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டதை நான் 100 வீதம் ஏற்றுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மஹிந்த ராஜபக்ஷவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் கோரியுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
    http://www.tamilwin.com/politics/01/145116?ref=home-feed

    ReplyDelete
  2. நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
    (அல்குர்ஆன் : 2:107)

    ReplyDelete

Powered by Blogger.