யாழ்ப்பாணத்தில் அல்லாஹ்வின் இல்லம், மூடப்பட்டதன் மர்மம் என்ன?
யாழ் மாவட்டத்தில் நகரை அண்டிய பகுதியில் உள்ள கோட்டை பள்ளிவாசல் தினமும் முடிக்கிடப்பதை காண முடிகின்றது.
வரலாற்று முக்கியத்துவமுள்ள ஒல்லாந்தர் கோட்டைக்கு அருகில் உள்ள அமைந்துள்ள இப்பள்ளிவாசல் தொடர்பாக இதுவரை யாழ் கிளிநொச்சி உலமா சபை கிளைக்கு தெரிவிக்கப்பட்டும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த காலங்களில் இப்பள்ளிவாசல் யாழ் முஸ்லீம்கள் சிலரினால் பராமரிக்கப்பட்ட நிலையில் திடிரென கைவிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இப்பள்ளிவாசலலுக்கு நிரந்திர மௌலவி ஒருவரோ நிர்வாகமோ இயங்குவதாக தெரியவில்லை.
இப்பள்ளிவாசல் கடந்த கால யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள தனவந்தரினால் புனரமைக்கப்பட்டு சிறிது காலம் இயங்கி வந்தது.
எனினும் தற்போது சில நபர்களின் சுயநலத்தினால் தினமும் முடப்பட்டு காணப்படுகிறது.
எனினும் தினமும் பள்ளிவாசல் அருகே உள்ள கோட்டையை பார்வையிட வெளிமாவட்ட பிரயாணிகள் வருகை தருகின்றனர்.
இவர்கள் தொழுவதற்கு சிரமங்களை எதிர்கொள்வதை காண முடிகின்றது.
வரட்டு கௌரவத்திற்காக சில நபர்கள் குறித்த பள்ளிவாசலின் சொத்துக்களை தம்வசம் வைத்துவிட்டு தடுமாறி திரிவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சில அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டமும் குறித்த பள்ளிவாசலில் காணப்படுகின்றது.
எனவே இப்பள்ளிவாசல் மீளவும் இயங்க ஆவண செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.
ReplyDelete(அல்குர்ஆன் : 9:18)