Header Ads



ஞானசாரரை கைது செய்யமுன், இஸ்லாமியர்களுக்கு எதிராக புத்தகம் எழுதிய சம்பிக்கவை கைதுசெய்ய வேண்டும் - நாமல்

இனவாதத்தை ஒழிக்க தற்காலிக செற்பாடுகள் வேலைக்கு ஆகாது நீண்ட கால திட்டம் அவசியம் என எனபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

நேற்று அவரது இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க முஸ்லிம் பிரமுகர்கள். வந்திருந்த போது அங்கு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

ஞானசார தேரரை கைது செய்துவிட்டால் அனைத்து பிரச்சினைகளும் முற்றுபெற்று விடும் என்ற நினைப்பில் சிலர்உள்ளனர். உண்மையில் அவரை கைது செய்யமுன்னர் இஸ்லாமியர்களுக்கு எதிராக புத்தகம் எழுதிய சம்பிக்கவை கைதுசெய்ய வேண்டும். ஞானசார தேரர் மாத்திரம் கைது செய்வதனூடாக ஒரு போதும் இனவாதத்தைஇல்லாதொழிக்க முடியாது.இன்று அவரைப் போன்று பலர் உருவாக்கப்பட்டுள்ளனர்.

இவரை கைது செய்தால் இவர் விட்ட இடத்தில் இருந்து இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல பலர்வருவார்கள்.ஏன் என்றால் அதற்காக வெளிநாடுகள் பணம் வழங்குகின்றன. 

எமது ஆட்சிக் காலத்தின் கடைசி இரு வருடங்களில் தான் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அமைப்புக்கள் தலைதூக்கி இருந்தன. இவ்வாறான அமைப்புக்களின் உள் நோக்கங்களை புரிந்து செயற்பட எமக்கு சில காலங்கள்தேவைப்பட்டன.அதற்குள் எமது ஆட்சி கவிழ்க்கப்பட்டுவிட்டது. தற்போதைய ஆட்சிற்கு பொது பல சேனாவின்இனவாத செயற்பாடுகளில் நான்கு வருட அனுபவம் உள்ளது.இவ் அனுபவமானது இவர்களை அடக்க போதுமானகாலமாகும்.

2004 ம் ஆண்டு இனவாத பிரச்சாரங்களை முதன்மையாக கொண்டு சுமண தேரர் தலைமையில் ஜாதிக ஹெலஉறுமய ஆரம்பிக்கப்பட்டது.அவர்களும் பொது பல சேனாவின் இன்றைய பாதையையே அன்று தெரிவுசெய்திருந்தார்கள்.அமைச்சர் சம்பிக்க முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு புத்தகமே வெளியிட்டிருந்தார். பொது பலசேனாவை எமது ஆட்சிக் காலத்தில் கட்டுப்படுத்த நாங்கள் தீர்மானம் மேற்கொண்ட போது எங்களை அவற்றைசெய்ய வேண்டாமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றோர் தடுத்தமையே இவர்கள் இருவரினதும் பாதைஒன்று என்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது.எனினும்,அக் காலத்தில் அவற்றுக்கு நாம் இடமளிக்கவில்லை.

இவ்வாறான பிரச்சனைகளை நிறைவுக்கு கொண்டு வர இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான  திட்டங்களை வகுத்து செயற்படுவதே ஆரோக்கியமானதாகும்.இவ் ஆட்சிக் காலத்தில் இன நல்லுறவை ஏற்படுத்தஎந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.தேசிய சகவாழ்வுக்கென  ஒரு அமைச்சை இவ்வரசுஉருவாக்கியுள்ள போதும் அவ் அமைச்சால் எந்தவிதமான உருப்படியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.இதுவரை ஒரு அனைவரும் ஏற்ற்றுக்கொள்ளும் ஒரு முன்மொழிவு கூட முன்வைக்கப்படவில்லை.

வெறுமனே அமைச்சுக்களை பெயரளவில் வைத்திருப்பதால் எதனையும் சாதிக்க முடியாது.இன்று அவர்களேதாங்கள் முன்னர் நியமித்த அமைச்சர் குறித்த அமைச்சை செய்ய மாட்டார்கள் என உணர்ந்து அமைச்சரவையைமாற்றுகின்றமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கனேசனின் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலையிட்டதால்அவர்களுக்கு இடையில் முரண்பாடுகள் தோன்றியிருந்த கதைகள் அமைச்சரவை மட்டம் வரை சென்றிருந்தது. 

இவர்களுக்குமிடையிலேயே சகவாழ்வை  ஏற்படுத்த முடியாதுள்ள போது எவ்வாறு இலங்கை நாட்டில்இனநல்லுறவை கட்டியெழுப்ப முடியும்.முதலில் இந் நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் இவ்வரசைமாற்றுவதே தீர்வாகும்.

7 comments:

  1. why did not arrest in your government. how many Muslim MP's begging with your dad take any action against to them.

    ReplyDelete
  2. Now we know who is behind Janasara.

    ReplyDelete
  3. Yes , we need a new Government ! Like the French did !

    ReplyDelete
  4. Not only Namal, there are some namely muslims too supporting Gnanasara!

    ReplyDelete
  5. அளுத்கமை பிரச்சனை ஞாபகமா நாமல்?

    ReplyDelete
  6. உண்மை. அந்த சம்பிக்கதான் அந்த நாய்க்கூட்டத்தை பாலூட்டி வளர்க்கின்றான்.
    அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுகிறான்

    ReplyDelete

Powered by Blogger.