94 Mp களுக்கு O/L கல்வித்தகைமை கூட இல்லை
இலங்கை பாராளுமன்றத்தில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
அவர்களில் 47 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாவர்.
20 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும் 25 பேர் பிரதி அமைச்சர்களாகவும் பதவி வகிக்கின்றனர்.
எமது நாட்டின் 94 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்திற்கான கல்வித்தகைமை கூட இல்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம்.ஓ.ஏ. டி. சொய்சாவை மேற்கோள் காட்டி, கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி டெய்லி நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.
எமது நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் கல்வித் தகைமை இவ்வாறு காணப்படுகின்ற நிலையில், 5.5 மில்லியன் மக்கள் வாழும் சிங்கப்பூரின் அமைச்சரவை 22 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் இரண்டு அமைச்சர்களைத் தவிர ஏனைய அனைவரும் குறைந்தபட்சம் பட்டப்பின்படிப்பை பூர்த்தி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சிங்கப்பூரின் நிகர தேசிய உற்பத்தி 290 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடந்துள்ளது.
1.3 பில்லியன் பேர் வாழ்கின்ற இந்தியாவின் மத்திய அமைச்சரவையில் 26 பேர் மாத்திரமே அங்கம் வகிக்கின்றனர்.
அங்கு 49 இராஜாங்க அமைச்சர்களும் உள்ளனர்.
அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அநேகமானவர்கள் சட்டம் படித்தவர்கள் என்பது விசேட அம்சமாகும்.
இந்தியாவின் நிகர தேசிய உற்பத்தி 2 ட்ரில்லியன் டொலரைத் தாண்டியுள்ளது.
65 மில்லியன் பேரை சனத்தொகையாகக் கொண்டுள்ள பிரித்தானியாவில் பிரதமர் உள்ளடங்கலாக 23 அமைச்சர்களே உள்ளனர்.
இவர்களில் 10 பேர் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளனர்.
ஏனைய அனைவரும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களாவர்.
2015 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் நிகர தேசிய உற்பத்தி 2.8 ட்ரில்லியன் டொலராகக் காணப்பட்டது.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் 92 பேர் நியமிக்கப்பட்டுள்ள எமது நாட்டில் 2015 ஆம் ஆண்டு நிகர தேசிய உற்பத்தி 82.32 பில்லியன் டொலர்களாகும்.
உலகின் அநேகமான நாடுகளில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகளை பகிரங்கமாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புள்ளது.
இலங்கையின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமை தொடர்பிலான தகவல்களைப் பெற்றுத் தருமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நியூஸ்பெஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.
14 நாட்களுக்குள் அதற்கான பதிலை வழங்குவதாக பாராளுமன்ற தகவல் அதிகாரி எழுத்துமூல இணக்கப்பாட்டினை தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமை தொடர்பிலான தகவல் பாராளுமன்றத்திடமிருந்து கிடைக்குமா?
Ella thuraikkum vinnappika,vealai vaaippu pera kurainthapadsa kalvi thakamai veandum aanal saddam eiyatum sapaikku?Arasiyal poakkirikalin uraividam.Marukka mudiyuma tholarkaley?
ReplyDeleteOnly qualification of MPs, what about President?
ReplyDeleteOur politicians have PhD in how to do corruption...
ReplyDelete