48 மணித்தியாலங்களுக்குள் பாரிய, வெள்ளம் ஏற்படும் ஆபத்து
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும், நாளையும் கடும் மழை பெய்யக் கூடும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் அனைத்து கங்கைகளும் நீரில் நிரம்பலாம் எனவும் அதனால் குறித்த கங்கைகளை அண்டிய பிரதேசங்களில் பாரிய வெள்ள நிலைமை ஏற்படும் ஆபத்துக்கள் காணப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவ்வாறான இடங்களுக்கு அருகில் இருப்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதியைச் சேரந்த வீடுகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசாங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது.
வெள்ளபெருக்கு ஏற்படும் ஆபத்துக்கள் உள்ள அனைத்து பிரதேசங்களின் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறும் அந்த பாடசாலைகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, தென், சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் பொதுவாக 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்று மழை நேரத்தில் கூடுதல் வேகத்துடன் வீசக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மாலைநேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் இன்றும் நாளையும் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Post a Comment