3 முஸ்லிம்களை கைதுசெய்தால், ஞானசாரரர் ஆஜராவார் - சிங்கள ராவய
-ARA.Fareel-
நாட்டில் இனவாதத்தைத் தூண்டுபவர், உரமூட்டுபவர் ஞானசார தேரர் அல்ல. ஞானசார தேரரை கைது செய்வதற்கு முன்பு 3 முஸ்லிம்களை கைது செய்யுங்கள். ஞானசார தேரர் தானாகவே முன்வந்து ஆஜராவார் என சிங்கள ராவயவின் செயலாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.
ராஜகிரியவிலுள்ள பொதுபலசேனாவின் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்தாவது
புதிய சட்டத்தின் கீழேயே ஞானசார தேரரை கைது செய்ய முயற்சிக்கிறார்கள் இன்று முஸ்லிம்களால் தொல்பொருட்கள் அழிக்கப்படுகின்றன.வனபிரதேசங்கள் சைத்தியாக்கள் அழிக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது நாம் வேதனையால் துன்பத்தால் துடிக்கிறோம்.
கண்களிலிருந்து நீர் வழிகிறது.ஞானசார தேரர் ஒரு குற்றவாளி அல்ல.அவர் பௌத்த மதத்துக்காகவும் பௌத்த நாட்டுக்காகவும் குரல்கொடுப்பவர். அவருக்கு ஏதும் ஏற்பட நாம் விடமாட்டோம். அவரைக் கைது செய்ய முடியாது. அவ்வாறு கைது செய்தால் எம்மையும் கைது செய்ய வேண்டிய நிலைமை உருவாகும் அதற்கு மேலும் 1000 சிறைச்சாலைகள் அமைக்க வேண்டியேற்படும்.
எமக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்க வேண்டியேற்படும். எமக்குப்பின் வருபவர்களும் சந்ததியினரும் ஞானசார தேரருக்காக குரல் கொடுப்பார்கள்.இன்று பௌத்த தலங்களுக்கும் தொல்பொருள் பிரதேசங்களுக்கும் வனபிரதேசங்களுக்கும் ஏற்பட்டுள்ள அழிவுகளை நாம் அனைத்துக்கட்சி அரசியல் தலைவர்களிடமும் பட்டியலிட்டுக் கொடுக்கவுள்ளோம்.
நாட்டில் இனவாதத்தைத் தூண்டுபவர், உரமூட்டுபவர் ஞானசார தேரர் அல்ல. அமைச்சர்கள் ரிசாத், ரவூப்ஹக்கீம் மற்றும் அசாத்சாலி முதலமைச்சர் விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம் விஜயகலா ஆகியோரே இனவாதத்தை தூண்டுகிறார்கள். எனவே ஞானசார தேரரை கைது செய்வதற்கு முன்பு இவர்களை கைது செய்யுங்கள்.
அஞ்சு பேருக்கு எதுக்குடா 1000 சிறைச்சாலை???
ReplyDeleteYou stop talking rubbish.
ReplyDeletePls you come and work for our community
Mad people
ReplyDeleteநிசார் நிசாம், உன் சுயநலத்திற்காக குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்காதே. இந்த சமூகத்திற்காக நீ கிழித்தது என்ன? முதலில் " the Muslim Voice" என்று உனது சுயநல குப்பை எழுத்துக்கு சமுகச்சாயலில் பெயர் வைக்க அனுமதித்தது யார். அடுத்தவர்களை குற்றம் சுமத்தும் உன் கபட கருத்துகளை நிறுத்தி விட்டு ஆக்கபூர்வமான கருத்துகளை சமூகத்திற்காய் எழுத முயற்சி செய்.
ReplyDelete