Header Ads



சிறைச்சாலை ஒன்றில் 1174 முஸ்லிம்கள் நோன்பு, ஆதரவாக 32 இந்துக்களும் நோன்பு

இந்தியா - உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மத்திய சிறையில் ரமலான் நோன்பு இருக்கும் முஸ்லிம் கைதிகளுடன், 32 இந்து மத கைதிகளும் விரதம் இருக்கின்றனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்திலுள்ள மத்திய சிறையில் சுமார் 2600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 1174 முஸ்லிம் கைதிகள் தங்களது முக்கிய கடமையான ரமலான் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர்.

இவர்களுடன் 32 இந்து மத கைதிகள் விரதம் கடைப்பிடித்து மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளனர்.

நோன்பு விரதம் இருக்கும் கைதிகளுக்கு மாலையில் உலர் பழவகைகள், பால், ரொட்டி ஆகியவை வழங்கப்படுவதாக சிறை கண்கானிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டும் இதே போல சுமார் 60 இந்து மத கைதிகள் முஸ்லிம்களுடன் நோன்பு விரதம் கடைப்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. சிறுபான்மையான முஸ்லிம்கள் சிறைச்சாலையில் பெரும்பான்மையாக இருக்கிறது மன வேதனையான விடயம் 2600க்கு 1174 பேர் முஸ்லிம்கள் முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள் இவர்கள் செய்த தவறுதான் என்ன.

    ReplyDelete

Powered by Blogger.