வட்ஸ்ப்பை வாங்கியபோது, பொய் சொன்ன பேஸ்புக் - 110 மில்லியன் யூரோ அபராதம்
வாட்ஸ்-அப்பை வாங்கிய போது தவறான தகவல்களை பதிவு செய்ததாக கூறி பேஸ்புக் நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியனானது 110 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் 790 கோடி ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.
முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம், தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்-அப்பை கடந்த 2014-ம் ஆண்டில் வாங்கியது. அப்போது, தவறான தகவல்களை பதிவு செய்து பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்-அப்பை வாங்கியுள்ளதாக புகார்கள் எழுந்தன.
இந்த வழக்கை விசாரித்து வந்த ஐரோப்பிய யூனியன், நேற்று பேஸ்புக் நிறுவனத்திற்கு 110 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் 790 கோடி ரூபாய்) அபராதம் விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்கும் போது விரிவான தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் முறையாகவும், துல்லியமாகவும் தெரிவித்திருக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு குறித்து பேஸ்புக் வழங்கிய பதிலில் ஐரோப்பிய யூனியனுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் பேஸ்புக் வழங்கியுள்ளது. எனினும் சில தவறுகள் ஏற்பட்டது உண்மை தான், அவை வேண்டுமென்றே மேற்கொள்ளப்படவில்லை. நாங்கள் பதிவு செய்த தகவல்களில் சில தவறுகள் தெரியாமல் இடம்பெற்றிருந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனின் இந்த தீர்ப்பை மேல் முறையீடு செய்ய அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment