மரதன் ஓடிய ஞானசாரா, தற்போது ஏன் 100 மீட்டர் ஓடவேண்டும்..?
மரதன் ஓடிய ஞானதார தேரர் தேரர் ஏன் தற்போது நூறு மீட்டர் ஓட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கேள்வி எழுப்பினார். செவ்வாய்கிழமை இரவு கட்டார் வாழ் இலங்கையர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
எமது நாட்டில் தற்போது முஸ்லிம் விரோத செயற்பாடுகள் மீண்டும் அதிகரித்து வருவதை நீங்கள் அறிவீர்கள். அதிலும் கடந்த சில வாரங்களாக பள்ளிவாயல்கள் தாக்குதலுக்கு உள்ளகியதையும் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்ட தையும் காணக்கூடியதாகவுள்ளது. தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டுவரும் இச்செயற்பாடுகளை அவதானித்தால் மீண்டும் ஒரு பேருவளை, தர்கா நகர் போன்ற கலவரங்களை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கவுள்ளதா? என்ற கேள்வி எம் மத்தியில் எழுகிறது.
ஆனால் அண்மைகாலங்களில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகளை திரும்பி பார்த்தால் இதன் பின்னால் உள்ள சில அரசியல் வாதிகள், இனவாதிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் புலனாகும். அதிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஞானதார தேரர் மேற்கொண்ட உண்ணாவிரதம் அவரின் நோக்கத்தை தெளிவாக்கியது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் தான் கைது செய்யப்படக் கூடும் என்ற அச்சத்தில் அவரின் கைதை தடுக்கவே இவ்வாறான் செயற்பாடுகளில் இறங்கியுள்ளார். அதாவது தான் பௌத்த மதத்தை பாதுகாக்க குரல் கொடுப்பதால் இந்த அரசு என்னை கைது செய்ய முயல்வதாக பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் அனுதாப அலை ஒன்றை ஏற்படுத்தி இதன் மூலம் அவரின் கைதை தடுக்கவே அவர் முயல்கின்றார். இவ்வளவு நாட்களும் பௌத்த மதத்தை பாதுகாக்கிறேன் என மரதன் ஓடிய தேரர் ஏன் தற்போது நூறு மீட்டர் ஓட வேண்டும்.
அதுதவிர சில அரசியல் வாதிகளுக்கும் இவரின் தேவைப்பாடு இப்போது அவசியமாகிறது. இலங்கைக்கு அண்மையில் GSP+ வரிச் சலுகை கிடைத்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எமது அரசுக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றியால் மக்கள் மத்தியில் எமக்கு அதிகரிக்கவுள்ள செல்வாக்கை தடுகத்து GSP+ வரிச்சலுகையிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கமும் சிலருக்கு உள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் தனிபட்ட சிலரின் சுயலாபங்களுக்காக முஸ்லிம் சமுதாயம் பழிகேடாக்கப் படுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. அன்று மஹிந்த ராஜபக்சவின் அரசில் காணப்பட்ட உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்த நாம், எமது சமூகத்துக்காக இந்த அரசுக்கு தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுப்போம்.
இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சிலர் எம்மை அரசை விட்டு வெளியேற்றி ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தலாம் என பகல் கனவு காண்கின்றனர். ஆனால் ஆட்சி மாற்றம் மூலம் இப்பிரட்சினைக்கு தீர்வு காணமுடியுமாக இருந்திருந்தால் நாங்கள் எப்பொழுதே அரசில் இருந்து வெளியேறி இருப்போம். ஆனாலும் முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரங்களை அதிகரித்து கொள்வதன் மூலமே நாம் இதற்கான தீர்வுகளை காண முடியும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமைப்பட்டு இந்த அரசில் கட்டளை இடுபவர்களாக மாற வேண்டும்.
வெறுமனே ஜனாதிபதி பிரதமரை மாற்றுவதன் மூலம் இப்பிரட்ச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் எனில் கடந்த ஆட்சிகாலத்திலே இந்த முஸ்லிம் விரோத செயற்பாடுகள் ஆரம்பிக்கப் பட்டன என்பதை மறந்து விட வேண்டாம் .
தற்போது ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உறுதிப்படுத்துவார்கள். அதற்கு தேவையாவ அழுத்தங்களை அனைத்து பகுதிகளில் இருந்தும் நாம் வழங்குவோம். தர்கா நகர் கலவரத்தின் போது எமது சமூகத்துக்காக பாரளமன்றத்த்தில் குரல் கொடுத்த முதலாவது மக்கள் பிரதிநிதி எமது பிரதமர் ஆவார். நல்லாட்சி பெற்றுக்கொடுத்த ஜனநாயகத்தை பயன்படுத்தி நல்லாட்சியை கவிழ்க்க நினைக்கும் சூத்திரதாலிகளை பற்றி அவருக்கு நன்கு தெரியும். ஆகவே அவர் இனவாதிகளின் சதித்திட்டங்களை முறியடித்து முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்.
ஊடகப்பிரிவு
Post a Comment