Header Ads



நான் குட்டையாக இருப்பதனால், பாராளுமன்றத்தில் வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை

நான் குட்டையாக இருப்பதனால் வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் -06- கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தொடர்ந்த அவர்,

முக்கியமான விடயங்களைப் பற்றி விவாதம் செய்யும் போது அதற்கான நேர ஒதுக்கீடு முறையாக இடம் பெறுவது இல்லை.

ஏதாவது காரணங்களை முன்வைத்து நான் பேச ஆசனத்தை விட்டு எழும் போது அதற்கான வாய்ப்பு எப்போதும் சபாநாயகரினால் வழங்கப்படுவது இல்லை. இது முற்றிலும் அசாதாரணமானது.

நான் குட்டையாக இருக்கின்றேன், அது மட்டும் இல்லாமல் பின் இருக்கையில் அமர்ந்து இருக்கின்றேன் என்பதால் எனக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

ஆனால் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவாகி பாராளுமன்றத்திற்கு வந்த உறுப்பினர் என்ற வகையில் எனக்கு பேசுவதற்கான உரிமைக் கொடுக்கப்பட வேண்டும்.

நான் விவாதத்தை குழப்புவதற்காக பேச வில்லை. வாய்ப்புகள் கொடுக்கப்படாத காரணத்தையே சுட்டிக் காட்டுகின்றேன் எனவும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.