Header Ads



இலங்கை வானொலியில் ஒலிபரப்பாவது, முஸ்லிம் சேவையா..?

-மூத்த ஊடகவியலாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இன்றைய (14) காலை முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகளை பகல் 12.20 மணி வரை கேட்ட துரதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவனாகினேன். இதுதான் முஸ்லிம் சேவையா? இவைகள்தான் இஸ்லாமிய விடயங்களா என நினைக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. முற்று முழுதாக விளம்பர மயம்.

ஒட்டுமொத்தமாக விளம்பரதாரர்களுக்கும் விளம்பர முகவர்களுக்கும் குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருந்த முஸ்லிம் நிகழ்ச்சியின் மொத்த நேரத்திலும் இஸ்லாமிய விடயங்கள் என்பது வெறும் ஸீரோதான். அர்த்தபுஷ்டியான ஆக்பூர்வமான எந்த விடயங்களும் உள்ளடக்கப்படாது ஏனோ, தானோ என்று அனைத்தும் காணப்பட்டன.

ஒரு மௌலவி கூறினார், இன்றைய முஸ்லிம் பெண்கள் வெளியே செல்லும் போது பூசிக் கொள்ளும் வாசனைத் திரவியம், ஒரு வீதியால் செல்லும் போது மற்ற வீதிக்கும் மணம் வீசுமாம். இது எவ்வளவு பெரிய டூப் பாருங்கள்… மேலும் சினிமா நடிகர், நடிகைகளின் பெயர்களை தங்களது பிள்ளைகளுக்கு வைக்கிறார்களாம். இது மாபெரிய பச்சைப் பொய்தானே? பணத்துக்காக ஹதீஸ், அறிவுரை சொல்ல வேண்டும் என்பதற்காக பொது வெளியில் முஸ்லிம் சமூகத்தை இப்படி கொச்சைப்படுத்தி விமர்சிக்கக் கூடாது.

இன்றைய இளம் தலைமுறை முஸ்லிம் பெண்களோ ஆண்களோ இந்த மௌலவி நினைப்பது போன்றவர்கள் அல்லர். அவர்கள் மிகுந்த மதக் கட்டுப்பாடு, சமூக ஒழுக்க விழுமியங்களைப் பின்பற்றுகின்றனர். தாங்கள் சரியாக வாழ்வது போன்றே தங்கள் பிள்ளகைளையும் நல்ல ஒழுக்கமான முறையில்தான் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் ஹதீஸ் சொல்ல வேண்டும், பணம் உழைக்க வேண்டுமென்பதற்காக வசனங்கள், வார்த்தை ஜாலங்களைப் பயன்படுத்தி இவ்வாறெல்லாம் கீழ்த்தரமாக சமூகத்தை விமர்சிக்க கூடாது. சில விடயங்களைச் சொல்ல வேண்டும் என்றால் அதனை சொல்வதற்கு கையாள வேண்டிய சிறந்த முறைகள், உதாரணங்கள் பல உள்ளன.

விளம்பரத்துக்காவும் வருமானத்துக்காவும் முஸ்லிம்களைப் பற்றி இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதற்கு களம் அமைத்துக் கொடுத்துள்ள இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை நிர்வாகத்தையே இந்த விடயத்தில் ஒட்டுமொத்தமாக குற்றம் சொல்ல வேண்டும்.

இது தவிர, தொழுகை நேரத்தை மீண்டும் ஒரு தடவை நினைவுபடுத்துவதற்கும் கூட விளம்பரதாரர்கள்தான் அனுமதிக்க வேண்டுமென்றால் இது என்ன முஸ்லிம் சேவையா அல்லது முனாபிக்களின் தேவையா? முஸ்லிம் நிகழ்ச்சி இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போனமைக்கு என்ன, யார் காரணம்? 

20 comments:


  1. விளம்பரத்துக்காவும் வருமானத்துக்காவும் முஸ்லிம்களைப் பற்றி இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதற்கு களம் அமைத்துக் கொடுத்துள்ள இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை நிர்வாகத்தையே இந்த விடயத்தில் ஒட்டுமொத்தமாக குற்றம் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  2. மௌலவி என்று சொல்லிக்கொண்டு சமூதாயத்தையும் அந்நிய மதத்தவர்களையும் ஏமாற்றி திரியும் இவ்வாறான கூலிக்கு மாரடிக்கும் மௌலவிகளினால்தான் இந்த சமூகத்துக்கு இவ்வளவு பிரச்சினை,இவர்கள் வீட்டில் ஒரு இஸ்லாம் ,பள்ளியில் இன்னொரு இஸ்லாம்,அமைச்சர்கள் முன்னிலையில் ஒரு இஸ்லாம் ,அடுத்த மதத்தவர்களிடம் இன்னும் ஒரு வகையான நாடக இஸ்லாம் செய்யும் இந்த போலி மௌலவிகளை முதலில் உண்மையான இஸ்லாத்துக்குள் கொண்டு வர வேண்டும்,வீட்டில் மனைவி சொல்லைக் கேட்டு குத்பா பிரசங்கம்,செய்வதும் அள்ளியும் கிள்ளியும் கொடுத்தால் அதுக்கு வேறு வேறு குத்பா பயான் இவ்விறு இஸ்லாத்தை குழி தோண்டி புதைக்கும் இந்த தரங்கெட்டவர்களை இனங்கண்டு, வேறுபடுத்தி நேர்மையுள்ளவர்களுக்கு தகுதிவாய்ந்த இடத்தை கொடுக்க வேண்டும்.அரசியல்வாதிகளுக்கு பின்னால் வால் பிடித்து முக்கியமான இடத்தை இவ்வாறான தக்வா இல்லாத மௌலவிகள் இந்த சமூதாயத்தின் சாபக்கேடு,

    ReplyDelete
  3. கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்னர் எழுத்து ஊடகமொன்றில் வாசித்ததற்கு இணங்க , இலங்கை வானொலியில் கோடி கோடியாக மிகக் கூடிய வருமானத்தைப் பெற்றுத்தரும் தனித்துறையாக முஸ்லிம் சேவை அமைந்திருப்பதும் ஏன் முஸ்லிம்களுக்கு என தனியான அலைவரிசை ஒன்றை கொள்வனவு செய்யவேண்டும் எனவும் ஆதங்கப்பட்டதை மீள்ஞாபகப்படுத்த முடிந்தது.
    அன்புள்ள ஊடகவியலாளர்களே!
    என் சிற்றறிவுக்கு எட்டிய சிலமுன்மொழிவுகளை முன்வைக்கின்றேன்.
    1 துறைசார் நிபுணர்களைஒன்றுகூட்டி பயனுள்ள கருத்தாடல்களை மேற்கொள்ளல்.
    2 இதற்கு அனுசரணையாக சூறா சபை இருத்தல்.
    3 கருத்தாடல்களின் அடிப்படையில் திட்டவரைவு ஒன்றை அமைத்தல்.
    4 அலைவரிசை கொள்வனவு மற்றும் இதர செலவுகளுக்கான கிரயத்தை கணித்தல்.
    5 நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் கொடையாளர்களை அடையாளங்கண்டு பட்டியலிடல்.
    6 கொடையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டமொன்றை ஏற்பாடு செய்து அவர்களது ஒப்புதலை பெறல்.
    7 தொடர் நடவடிக்கைகளை தீர்மானித்தல்
    8 கால வரையறைக்கு ஏற்ப செயலாற்றலும் தொடர் மதிப்பீடுகளை மேற்கொள்ளல்.
    இத்தனைக்கும் ஆரம்ப முயற்சியை காரியப்பர் சேர் ஏன் நீங்கள் எடுக்கக்கூடாது?
    இது சாத்தியமானால் உங்களால் முன்வைக்கப்பட்ட அத்தனை விடயங்களையும் சிறப்பாக முகாமைசெய்யலாம் என்பது எனது எதிர்பார்ப்பாகும்

    ReplyDelete
  4. மார்க்கத்தின் பெயரால் எதை சொன்னாலும், செய்தாலும் முஸ்லிம்கள் சகித்துக் கொள்வார்கள், அவர்கள் முட்டாள்கள் என்று மெளலவிகள் நினைக்கின்றார்களா என்று தெரியவில்லை.

    இன்று விடுமுறை தினம், நேரத்திற்கே ஜும்மவிற்கு அதிகமான மக்கள் வந்துவிட்டார்கள், பள்ளிவாசலும் நிறைந்து விட்டது. ஒரு அர்த்தமில்லாத தனமாக மெளலவி மக்களின் நேரத்தை வீணடித்துக் கொண்டே இருந்தார். விடுமுறை தினம், பகலுணவை குடும்பத்தினருடன் உண்டு, குழந்தைகளுடன் நேரத்தை களிக்கலாம் என்றால், சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் குத்பா என்ற பெயரில் மெளலவியாழ் வீணடிக்கப் பட்டன. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போன்று அர்த்தமில்லாமல் பேசிக்கொண்டு இருந்தார் அந்த இமாம். மக்கள் பாவம், குத்பா என்பதால் மாடுகள் போன்று கேட்டுக்கொண்டு இருந்தார்கள், அது கடமையான ஜும்மா இல்லை என்றால் நான் எப்பொழுதோ எழும்பி வந்திருப்பேன்.

    குத்பாக்களை சுருக்கமாக, அழகாக அமைத்துக் கொள்ளுங்கள், மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, அடுத்து எல்லோரிடமும் தகவல் தொடர்பு சாதனங்கள் உண்டு, பத்து வருடத்திற்கு முன்னர் போன்று பாட்டி அப்பம் விற்ற கதை சொல்லி மக்களின் நேரத்தை வீணடிக்க முடியாது, எல்லோரும் ரொம்ப அப்டேட்.

    ReplyDelete
    Replies
    1. ஓ. உங்களுக்கெல்லாம் குத்பாக்கள் பாரமாகிவிட்டது. பெரிய அறிவாளி

      Delete
  5. Every think is Business, Religion is the most attractive good for people.

    ReplyDelete
  6. What I do is switch off this radio (Muslims service) when they keep advertising for umrah, hajj and others...they are making money in the name of Muslim\s service...nice!

    ReplyDelete
  7. Very true article must need to change the way of broadcasting Muslaims Nihalchi in valuable chance in Sri lanka Radio

    ReplyDelete
  8. எந்த மதமாக இருந்தாலும், அதனை பிரச்சாரம் செய்ய, விளம்பரம் செய்ய ஒரு தேசிய வானொலியில் அனுமதிப்பதே தவறு. மதப்பிரச்சாரம் மக்களை வெறியர்களாக மாற்றுவதுடன், நாட்டில் வேற்றுமைகளையே வளர்க்கும்.

    அடுத்து வரக்கூடிய தலைமுறைகளையாவது மத, இன பாகுபாடற்ற மனிதநேயம் மிக்க தலைமுறைகளாக மாற்ற முயற்சிப்போம்.

    ReplyDelete
    Replies
    1. Dear Hari,
      You commented here with the ignorance about Islam.
      Islam is the only religion acknowledged by the God and it stand out against all other human-made/adulterated scripts.

      Humanity is of paramount importance in Islam.
      Please learn the immaculate Islam thoroughly.

      Delete
    2. ஹரி கியன்னே ஹரி. ஆம், ஹரி சொல்வது சரி. அவர் மதங்களைப் பற்றிப் பேசுகிறார். அவரது தூர நோக்கும் பாராட்டப்பட வேண்டியதே.

      ஆனால், இஸ்லாம் ஒரு மதமல்ல. அதுவொரு மார்க்கம். ஒரு வாழ்க்கை நெறி. இந்தப் பூமியையும் அதில் வாழும் மனிதர்களையும் படைத்த இறைவன், வெறுமனே படைத்தத்தோடு விட்டு விடாமல் அவன் அதில் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்றுத்தரும் ஓர் வாழ்வியல் முறையே அது.

      அதனை அனைவரும் சரியாகப் பின்பற்றி வாழ்ந்தால் அவர் எதிர்பார்க்கும் ஒரே சமுதாயமாக மனிதர்கள் அனைவரையும் நாம் காணலாம்.

      ஒவ்வொரு மனிதனும் தன்னைப் படைத்த இறைவனை அறிந்து தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்வதால்தான் இது சாத்தியம்.

      Delete
  9. நூற் டீன் நீங்கள் சொல்வது மிகவும் உண்மையான விடயம் இதில் அதிகமான மௌலவிகள் முடிக்க தெரியாமல் உலருவதுதான் வேடிக்கை,

    ReplyDelete
  10. Muslim service is one of few privileges that our society entertain in the media and play an important role to educate the Islamic teachings and values to our society and other communities as well.This service could be used to promote coexistence among srilankan society for the harmony of the island.If there is any disputes in the programs,it should be addressed and dealt appropriately rather than taking the matters as public issues. There are elements waiting to sabotage this program. So that it is our responsible to safeguard this program and the conflicts should be handled wisely. Pls note that this comment is not a reply to the author but intended to make awareness among the society.

    ReplyDelete
  11. Muslim service is one of few privileges that our society entertain in the media and play an important role to educate the Islamic teachings and values to our society and other communities as well.This service could be used to promote coexistence among srilankan society for the harmony of the island.If there is any disputes in the programs,it should be addressed and dealt appropriately rather than taking the matters as public issues. There are elements waiting to sabotage this program. So that it is our responsible to safeguard this program and the conflicts should be handled wisely. Pls note that this comment is not a reply to the author but intended to make awareness among the society.

    ReplyDelete
  12. இலங்கையில் முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனித்துவமான ஊடகம் ஒன்று இல்லாத சூழலில் முஸ்லீம் வானொலியில் கிடைத்திருக்கும் வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தாமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் இறைவனிடம் குற்றவாளிகளாக இருக்க வேண்டி ஏட்படும்.ஏனைய சகோதர வானொலிகள் தங்கள் சமூகத்துக்காக எவ்வாறு பாடு படுகின்றார்கள் என்பதை சற்று அவதானித்து பாருங்கள்

    ReplyDelete
  13. If we look at one complain of Karyappar that some
    Muslims name their children after cinema stars ,
    it is not right because Muslims don't have the
    names of Hollywood stars or the stars of Sinhala
    cinema . But Bollywood cinema has so many Muslim
    stars and our Muslims might like them and in any
    case , if the name is Muslim what is wrong ? The
    second complain , women wearing perfume ! What's
    the purpose of wearing perfume in the first
    place ? To avoid smelling bad in public! May be
    many of us don't know why using perfume and today
    it could be a fashion but remember that for men
    it is encouraged in Islam .In the West now you
    rarely find anyone wearing perfume because they
    bathe everyday in the morning and take a body wash
    in the evening with perfumed shampoos and body
    creams. So no body odour !Kariyappar's utterances
    about today's younger generation of Muslims is a
    joke ! There are of course good ones but
    how many ? Not even five percent ! Anyone can
    disagree but this is what I have seen everywhere!
    Ads full of the programme must be censured
    without mercy.

    ReplyDelete
  14. Well said Noordeen ! Moulavis behave as if nobody in
    the crowd knows nothing about the religion and the
    other thing is nobody in the prayer hall is listening
    to the boring unrelated stories they are telling from
    the Mimber .

    ReplyDelete
  15. if we have a shop we need customer. Like SLBC Muslim Radio want to Run Need commercial Advertisement.
    But if they get any ad should conform to Broadcast real Time
    & Millennium Institute & Mustafa University Absolutely Siya . there are not A Muslim. why the advertising ? Need Many But Dont sale Islam. Without add cannot run this service. should be manage advertisement & advertiser

    ReplyDelete
  16. if we have a shop we need customer. Like SLBC Muslim Radio want to Run Need commercial Advertisement.
    But if they get any ad should conform to Broadcast real Time
    & Millennium Institute & Mustafa University Absolutely Siya . there are not A Muslim. why the advertising ? Need Many But Dont sale Islam. Without add cannot run this service. should be manage advertisement & advertiser

    ReplyDelete
  17. ஆமாம் உண்மைதான் விளம்பரங்களே அதிகம் வருகிறது

    ReplyDelete

Powered by Blogger.