Header Ads



விடுமுறை செல்பவர்களே, மாற்றுமதத்தினருக்கு தொந்தரவு செய்யாதீர்கள்..!


-Inamullah Masihudeen-

சுற்றுலா செல்வது அல்லாஹ்வின் அத்தாட்சிகளைப் பார்ப்பது எல்லாம் அல்லாஹ்வோடு எம்மை நெருங்கச் செய்தல் வேண்டும், மாறாக ஷைத்தானிய்யத் மேலோங்க அவை காரணமாக இருந்து விடக் கூடாது.

பருவகால சுற்றுலாக்களில் இஸ்லாமிய வரை முறைகள் தாண்டிய ஒழுக்க சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றமை, குறிப்பாக குழுக்களாக புறப்படும் இளைஞர்களின் நடவடிக்கைகள் கவலை தருகின்றன.

பயணத்தில் இருப்போர் மாற்றுமத சகோதரர்களின் புதுவருடக் கொண்டாட்டங்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டும் இருக்கின்றது.

குறிப்பாக நுவரெலியாவில் பருவகால சுற்றுலா என்று முஸ்லிம்களால் விஷேட ஏற்பாடுகள் செய்யப்படுவது மற்றும் விஷேட குத்பாக்கள் ஏற்பாடுகள் செய்யப்படுவது எதுவும் தவறில்லை.

என்றாலும் அவற்றை வழமையாக்கிக் கொண்டு பருவகால சுற்றுலா வேடிக்கை விநோதங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊக்குவிப்பது தவறான விடயமாகும்.

போகிற போக்கைப் பார்த்தால் புனித ஹரம்களின் இமாம்களையும் நுவரெலியாவிற்கு ஒருகாலத்தில் அழைத்து வந்து குத்பாக்கள் ஒதுவார்களோ என்றும் அஞ்ச வேண்டி இருக்கிறது.

குறிப்பாக குத்பாக்களை இயன்றவரை சுருக்கமாக நிறைவேற்றுவதன் மூலம் பாதையோரங்களில் சன மற்றும் வாகன நெரிசல்கள ஏற்படுவதனை நாம் தவிர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

நீண்ட விடுமுறைகள் கிடைக்கும் பொழுது இயன்றவரை ஊர், உறவுகள் என குடும்ப உறவுகள் என்று பரஸ்பரம் சந்திப்புக்களை மேற்கொள்வது ஒன்றுகூடுவது போன்ற நல்ல காரியங்களையும் செய்யலாம்.

மாறாக, இந்தப் பருவகால சுற்றுலாக்களை அதனூடாக மேற்கொள்ளப்படுகின்ற வர்த்தக மாஃபியாக்களை சீர்கேடுகளை ஊக்குவிப்பதில் இருந்து அல்லாஹ்விற்காக எல்லோரும் தவிர்ந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

2 comments:

  1. Matru matru madhathawarhaluku anubawika mudiyadha alawuku .muslimgal.hotel room veedu booking aahi ulladhu.awrudhu kanne thambiya thamai.thirundha matanga.awanuhaluku aripu warudhu.

    ReplyDelete
  2. இதெல்லாம் செவிடன் காதில் ஊதும் சங்கு..... வேறு ஏதும் காதல் கற்பனை கதைகளை எழுதி பிரசுரியுங்கள் நல்ல வரவேற்பு பெரும். முடியுமானால் இன்று (15-04-2017) நுவரேலியாவில் ஒரு சுற்று சுற்றி விட்டு வந்தால் நூற்றுக்கு எதனை வீதம் நமது முல்லாக்கள் இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். இவ்வாறான செய்தி வருடத்துக்கு ஒரு முறை தமிழ் மொழியில் பிரசுரமாகும் அணைத்து பத்திரிகையிலும் பொதுவாக வாசிக்க கிடைக்கும் ஒரு செய்தியாகும் .

    ReplyDelete

Powered by Blogger.