அமைச்சர்களை மாற்ற ஜனாதிபதி திட்டம், ரணில் இணக்கம்
புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புத்தாண்டு விடுமுறைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள அமைச்சர்கள் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவையில் மாற்றம் செய்ய பிரதமர் இணக்கம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமரின் வெளிநாட்டு பயணங்களின் பின்னர் அமைச்சரவை மாற்றம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.
Post a Comment