Header Ads



முஸ்லிம்களின் பங்களிப்புடன், ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவோம்..!

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்சிக் காலத்தில் முஸ்­லிம்­களின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட அநி­யா­யங்­களை பார்க்­கும்போது அளுத்­கம சம்­பவம் ஒரு கல­வ­ரமே அல்ல என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

அத்­து­டன்­முஸ்­லிம்கள் எம்மை எதிர்க்க வேண்டும் என்­ப­தற்­காக எங்கள் ஆட்­சிக்கு முன்னர், முஸ்­லிம்­க­ளுக்கு மிகக் கடு­மை­யாக கருமை அனு­ப­வங்­களை பரி­சாக கொடுத்­த­வர்­க­ளுடன் கூட்டுச் சேர்ந்து செயற்­ப­டு­கின்­றனர் என நேற்று கொழும்பில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றில் தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,

எமது ஆட்சிக் காலத்தில் இலங்கை முஸ்­லிம்கள் பல இன­வாத எதிர்ப்­புக்­களுக்கு முகம் கொடுத்­ததை நாம் மறுக்க முடி­யாது. அதனை ஏற்க மறுப்­பது உண்­மையை ஏற்க மறுப்­ப­தா­கி­விடும்.

அந் நேரத்தில் நாம்  இவற்றை முடி­வுக்கு கொண்­டு­வர சிந்­தித்தபோது  சம்­பிக்க போன்­ற­வர்­களால் அவற்றை செய்ய முடி­யாது போனது. அந் நேரத்தில் நாமும் சில விட­யங்­களை கவ­னத்திற் கொள்ள வேண்­டிய நிலையில் இருந்தோம்.

எமது ஆட்­சியில் மாத்­திரம் தான் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான இன­வாத முன்­னெ­டுப்­புக்கள் நடக்­க­வில்லை. அதற்­காக எமது ஆட்சிக் காலத்தில் இடம்­பெற்­ற­வற்றை சரி­யெனக் கூற­வு­மில்லை.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­கா­வி­னு­டைய ஆட்சி காலத்தில் மாவ­னல்லை கல­வரம் இடம்­பெற்­றி­ருந்­தது. அது போன்று ஐ.தே.கவி­னு­டைய ஆட்சிக் காலத்தில் முஸ்­லிம்கள் சொல்­லொணா துய­ரங்­களை அனு­ப­வித்­தி­ருந்­தனர்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பல கல­வ­ரங்கள் ஐ.தே.கவி­னு­டைய ஆட்சிக் காலத்­தி­லேயே இடம்­பெற்­றி­ருந்­தன. இவ்­வா­றெல்லாம் நடந்­துள்ள போதும் இன்று முஸ்­லிம்கள் எம்மை மாத்­தி­ரமே குறை கூறிக்கொண்டு அவர்­க­ளுடன் இணைந்­துள்­ளனர். முஸ்­லிம்கள் எமது ஆட்சிக் காலத்­திற்கு முன்­னுள்ள  வர­லா­று­களை மீள நினை­வு­ப­டுத்திக் கொள்­வது சிறந்­த­தாகும்.

எமது ஆட்சிக் காலத்தில் இடம்­பெற்ற இன­வாத செயல்­களை எமது ஆட்சிக் காலத்­துக்கு முன்னர் இடம்­பெற்ற  இன­வாத செயல்­க­ளுடன் ஒப்­பிடும்போது அளுத்­கமை கல­வரம் ஒரு கல­வ­ரமே அல்ல.

இன்று முஸ்லிம்கள் வாக்­க­ளித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­திரி அளுத்­கமை கல­வரம் நடக்கும் போதெல்லாம் எங்­க­ளுடன் தான் அப்பம் சாப்­பிட்­டுக்­கொண்­டி­ருந்தார்.இச் சம்­பவம் தொடர்பில் எம்மை குற்றம் சாட்­டு­வ­தானால் அவ­ரையும் குற்றம் சாட்­டு­வதே பொருத்­த­மா­னது.

அது போன்று இன்­றைய ஆட்­சியின் பிர­தான பங்­கா­ள­ரான சம்­பிக்க, இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக புத்­தகம் எழுதி பேரின மக்­க­ளி­டையே இன­வாத நச்சு விதையை விதைத்­த­வர்­களில் முதன்­மை­யா­னவர்.அளுத்­கமை கல­வ­ரத்தின் பிர­தான சூத்­தி­ர­தா­ரியும் அவரே.இன்று அவர்தான் முஸ்­லிம்­களின் நல்­லாட்­சியின் முக்­கிய தள­பதி.

இவ்­வா­றா­ன­வர்­களை நம்­பிய முஸ்­லிம்கள் அவர்களுடன் கை கோர்த்துக்கொண்டு எங்களை எதிர்த்து பயணித்து கொண்டிருப்பது வேடிக்கையாகவுள்ளது.

தற்போது முஸ்லிம்கள் தெளிவு பெற்று நாளாந்தம் எம்மை நோக்கி வருவதை அவதானிக்க முடிகிறது.மிக விரைவில் முஸ்லிம்களின் பங்களிப்புடன் ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவோம்.

1 comment:

  1. இவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்; ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது; ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 4:108)

    ReplyDelete

Powered by Blogger.