Header Ads



மாமியாரின் கொடுமை - இலங்கையிலிருந்து3 குழந்தைகளுடன், இந்திய சென்ற பெண்

இலங்கையிலிருந்து 3 குழந்தைகளுடன், படகில் தனுஷ்கோடி வந்த இலங்கை பெண்ணிடம் பொலிசார் விசாரணை செய்து வருவதாக தமிழக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

மாமியாரின் கொடுமை காரணமாக இலங்கையிலிருந்து இந்திய வம்சாவளி தமிழ் பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் படகு மூலம் தமிழகத்திற்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

தனுஷ்கோடி அருகே மணல் தீடையில் நேற்று வியாழக்கிழமை 3 குழந்தைகளுடன் தத்தளித்த இலங்கை பெண் அகதியை பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் தங்கம் (28). இவரது குழந்தைகள் லட்சிகா (5), ஜஸ்னிகா (4), சுபிக்சன் (1) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடலோரக் காவல் துறையால் மீட்கப்பட்ட இவர்கள் மண்டபம் அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

பொலிஸார் பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அப்பெண் கூறியுள்ளதாவது, 

எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி. எனது கணவர் விக்னேசுவரன் கொழும்பைச் சேர்ந்தவர். அவர் தற்போது சவூதியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 3 குழந்தைகளுடன் கொழும்பில் வசித்து வந்தேன். மாமியார் கொடுமை தாங்க முடியாமல், சொந்த ஊருக்கு வர முடிவு செய்து படகில் வந்தோம். படகில் அழைத்து வந்தவர்கள் தனுஷ்கோடி அருகே மணல் தீடையில் இறக்கி விட்டுச் சென்று விட்டனர் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.